பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 f விஜனச் சொல் 38. வினைச் சொல்லாவது, பெயர்ச் சொல்லின் தொழிலக் காட்டுவதாம். (வினை = தொழில்) (உ-ம்) முருகன் வந்தான். வள்ளி பாடின்ை. சேவல் கூவியது. 39. வினேச்சொல் முடிந்த தொழிலைக் காட்டுவது வினைமுற்று எனப்படும். (உ-ம்) நடந்தான், வருகிருன், படிப்பான். 40. வினேச்சொல் முடியாத தொழிலாய் வருவது எச்சம் ஆகும். (உ-ம்) நடந்து, வருகிற, படிக்க. 41. இவ்வெச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பன. 42. பெயர்ச்சொல்லேக் கொண்டு முடியும் எச்ச வினே, பெயரெச்சம் ஆகும். (உ-ம்) நடந்த பையன், வருகிற வண்டி, ஒடும் மாடு 43. வினைச்சொல்லக் கொண்டு முடியும் எச்ச வினே வினே எச்சம் ஆகும். (உ-ம்) நடந்து வந்தான், வந்து போனுன், படிக்க வந்தாள்.