பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இடைச்சொல் 53. இடைச் சொல்லாவது, பெயர்ச் சொற்கள் போலவும் வினைச் சொற்கள் போலவும் தனித்து வராமல், அவற்ருேடு சேர்ந்து வருவது. 54. போல, போன்ற, உம், ஐயோ, அம்மா, அத்த, இந்த, எந்த என்பன எல்லாம் இடைச் சொற் களாகும். (உ-ம்) புலி போலப் பாய்ந்தான் தேன் போன்ற இனிமை நானும் நீயும் ஐயோ பாவம் ! அம்மா பெரிது ! இந்த வீடு எந்தப் பையன் குறிப்பு:- வேற்றுமை உருபுகளும் இடைச் சொற்களே கேள்விகள் 1. இடைச் சொல்லாவது யாது ? 2. எவை எவை இடைச் சொற்களாகும் ? பயிற்சி 18 1. கோடிட்ட இடங்களை இடைச் சொற்களால் பூர்த்தி செய்க :கோழி --- கூவினன். நீ--- பள்ளியில் படிக் கிருய் ? பால் --- தேன் --- பாகு --- பருப்பு-இவை நான் - கலந்து தருவேன்.