பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஃபிரெஞ்சுப் புரட்சி"யை எழுதிய தாமஸ் கார்லைல் விடா முயற்சி !

| தாமஸ் கார்லைல்

191பெரும் சிந்தனையாளர் தாமஸ் கார்லைல், ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி (French Revolution என்ற ஒரு நூலை அவர் எழுதி முடித்தார்.

அந்த வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துப் பார்க்குமாறு, கார்லைல் தனது நண்பரான ஜான் ஸ்டூவர்ட் மில் என்ற அறிஞரிடம் கொடுத்தார்.

நாட்கள் பல நகர்ந்தன. ஒரு நாள் ஸ்டுவர்ட் மில், கார்லைலிடம் பதறி ஓடி வந்து எனது விட்டுப் பணிப் பெண் தங்களது நூலை இன்னது என்று புரியாமல் அடுப்புப் பற்ற வைப்பதற்குப் பயன்படுத்தி விட்டாள் என்று கண்ணி சிந்தியபடியே மனம் நொந்து வேதனைகளோடு கூறி வருத்தப்பட்டார்.

மில் கூறியதைக் கேட்ட கார்லைல், மனம் பதறி, அதை வன்மை யாகக கண்டித்துப் பல நாட்கள் அவர் வீட்டிற்குச் சென்று, தேட வேண்டிய இடங்களிலே எல்லாம் அவரே தேடி தேடிப் பல நாட்கள் அங்கேயே தங்கிப் போராட்டமே நடத்தினார் - கார்லைல்; ஸ்டுஸ்வர்ட் மில் வீட்டில்.

"ஐயோ! எனது இரண்டாண்டு காலத்தின் கடும் உழைப்பு சாம்பலாகப் போச்சே மறுபடியும் என்னால் வரலாற்று ஆதாரங்களைத் தேடித் திரட்ட முடியாதே! அது பெருங் கஷ்டமாச்சே!

மறுபடியும் அந்தச் சான்றுகளை எப்படியய்யா நான் திரட்டுவேன். அதை மீண்டும் எழுதும் மனோ சக்தியைக்கூட இழந்து விட்டேனே! எல்லாம் நெருப்பாகப் போயிடிச்சே என்று மீண்டும் மீண்டும் அலைமோதி அழாத குறையாக, மனவேதனைத் தீயிலே கார்லைல் துடிதுடித்து வீடு திரும்பினார்.