பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 463

ஒரு நாள் கார்லைல் பாரீஸ் நகர வீதிகளிலே நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வீடு கட்டும் கொத்தனார் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து எடுத்து வைத்து, அடுக்கி அடுக்கிச் சுவர் எழுப்புவதை அவர் கண்டார்.

அந்தக் காட்சியை அங்கேயே அமர்ந்து கார்லைல் ஆழ்ந்து பார்த்தார். ஒவ்வொரு செங்கல்தான் சுவராகின்றது என்ற திட்டத்தை அவர் சிந்தித்தார். அந்தக் காட்சி கார்லைல் உள்ளத்தில் ஓர் எழுச்சியை உருவாக்கி விட்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு அவர் வந்தார்.

"இன்றைக்கு ஒரு பக்கம் எழுதுவோம்; நாளைக்கு ஒரு பக்கம் எழுதுவோம்; ஒரு தடவைக்கு ஒரு பக்கம் எழுதுவோமே" என்ற முடிவுக்கு கார்லைல் வந்தார்.

அன்று முதல் கார்லைல் தனது நூலை எழுத, ஒரு நாளைக்கு ஒரு பக்கமாக ஆதாரங்களைச் சிறுகச் சிறுகத் தேடி சேர்த்து எழுதிக் கொண்டே வந்தார்.

அந்தப் புத்தகம் முடியும் வரை அதனுடன் போராடிப் போராடிக் கடுமையாகக் கார்லைல் உழைத்தார். இரவு - பகல் என்று பாராமல் கார்லைல் தனக்குரிய ஆதாரங்களை ஆய்ந்துத் திரட்டினர். ஒருவாறாக புத்தகம் உருவானது.

புத்தகம் முடிந்தவுடன் ஒரு முறை கார்லைல்; தான் எழுதிய நூலை மீண்டும் அவரே படித்துப் பார்த்தபோது, முதலில் எழுதிய ஃபிரெஞ்சுப் புரட்சி நூலைவிட - மிகச் சிறப்பாக இரண்டாவது நூல் அமைந்து விட்டதைக் கண்டு மீண்டும் மகிழ்ச்சிக் கண்ணி சொறிந்தார்.

எனவே, மாணவர்களே நீங்கள் ஒவ்வொருவரும், எந்த பருவத்திலும், சிந்தனையாளர் தாமஸ் கார்லைல் சிந்தனையைத் தொடர்ந்து, ஆழ்ந்து, அக்கரையுடன், விட முயற்சியோடு தினந்தோறும் பெற்றால் - உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்ற ஒளிகள் படருமல்லவா?

முயற்சிகள் செய்யும்போது, இடையூறுகள்,தீய உணர்வுகள் எதற்கும் உங்களுடைய மனத்தில் இடம் தராதபடி கடினமாகத் தளராமல் உழைத்தால், உங்களுடைய எந்த முயற்சியும் . இகழ்ச்சி அடையாது! வெற்றி பெற்றே தீரும். விடா முயற்சியும் திருவினையாக்கும் அல்லவா?