பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 18

பார்த்துக் கொள்ளுங்கள். அந்த காந்த முனைக்கு மேலே கம்பி ஒன்றைத் தொங்க விடுங்கள். அவ்வாறு தொங்கவிடப்பட்ட கம்பியின் முனை சிறிது பாதரசத்திற்கு உள்ளே மூழ்கி இருக்குமாறு செய்யுங்கள்.

'மற்றொரு கம்பியை எடுத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே இருந்த பாதரசத்தினுள் செருகி, அந்தக் கம்பியின் மறுமுனையைப் பாத்திரத்துக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும்படி செய்யுங்கள். அதன் பிறகு, அந்த இரண்டு கம்பிகளின் மறுமுனையை ஒரு மின்கல அடுக்குடன் இணையுங்கள் - அவ்வளவுதான் இப்போது பாருங்கள்

அந்த, காந்தக் கட்டைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கம்பி, காந்தத்தைச் சுற்றிச் சுற்றி வருமே! இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் மின்சார மோட்டார்கள் உருவாக்கப்படுகின்றன.

என்ன மாணவ - மணிகளே காந்தத்தை மின்சாரமாக்கிக் காட்டியதோடு நின்றாரில்லை - ஃபாரடே மின்சார மோட்டார்களை உருவாக்கும் அடிப்படைக் கோட்பாட்டையும் உருவாக்கி விட்டாரே பார்த்தீர்களா? இதுதான் சாதனை: மனித சக்தியின் அற்புத முயற்சி! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மாணவ - மணிகளே!

விஞ்ஞான மேதை மைக்கேல் ஃபாரடே எண்ணற்ற அறிவியல் துறை அற்புதங்களைச் செய்த அதிசய மனிதராக விளங்கினார். அவை அனைத்தையும் விளக்கும் நூல் அல்ல, இது. காரணம், மாணவர் அறிவு ஏற்குமளவுக்குள்ள சிறுவர் விஞ்ஞானம் இந்நூல் அதனால் சுருக்கமாகக் கூறியுள்ளோம்.

மாணவர்களே! மாணவிகளே!

மின்சாரத்தை சக்தியாக மாற்றுவதை மற்ற விஞ்ஞானிகளிடையே விளக்கிக் காட்டியவர் ஃபாரடே ஒளியாக மாற்றுவதையும் அவர் நிரூபித்தார். வாயுக்களைத் திரவமாகவும் மாற்றிக் காட்டினார் மின்காந்தப் பண்புகளையும் மாணவர்கள் இடையே அவர் நடத்திய வகுப்பில் விளக்கிக் காட்டினார் - ஃபாரடே.

மின்விசைப் பொறியெனப் பொருள்படும் மின்சார மோட்டார், மின்னாற்றலை உண்டாக்கும் பொறியான மின்சார ஜெனரேட்டர் என்ற இரண்டு கண்டுபிடிப்புகளுக்கும் மைக்கேல் ஃபாரடேதான் தந்தை என்று உலகம் இன்றும் புகழ்ந்து பாராட்டுகிறது. -

மின்சாரத்தைப் பல்வேறுத் துறைகளில் பயன்படுத்தி எண்னற்றத் தொழில் முறைகள் உலகத்தில் நடைபெற்று வருகின்றன. அதற்கான அடிப்படைகள்ை அமைத்துக் கொடுத்தவர் மைக்கேல் ஃபாரடே.