பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் மேதைகள் எனப்படுவோர் மற்றவரோடு கலந்து பழகார்; அதை

வெறுப்பர் தானுண்டு பணியுண்டு; வீடுண்டு என்று தன்னை அடக்கிக்

கொள்ளும் பண்பர்களாகவே இருப்பார்கள்.

ஆனால், ஃபாரடேயிடம் இருந்த அறிவையும், அன்பையும், பழக்க - வழக்க இனிமைகளையும் கண்டு அறிஞர்கள், அறிவியல் மாணவ-மணிகள் பலாச்சுளை ஈக்களென அவரை மொய்ப்பர்; கலந்துரையாடி அறிவின்பம் பெறுவர்.

நூலகத்துள் சாதாரண ஒரு புத்தகப் பைண்டராக மைக்கேல் ஃபாரடே பணியாற்றப் புறப்பட்டு, ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களையும் அரும்பாடுபட்டுக் கண்டறிந்து, உலகுக்குப் பல அறிவுக் கொடைகளை வழங்கிய மாமனிதர் மைக்கேல் ஃபாரடே|

"அறிவுடையார் எல்லாம் உடையார்' என்ற திருவள்ளுவர் பெருமான் இலக்கணத்திற்கேற்ப, அவர் தோன்றிய அறிவுத் துறைகளிலே எல்லாம் புகழொடு தோன்றினார்.

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரத்திலே 22.9.1791-ஆம் ஆண்டில் மைக்கேல் ஃபாரடே என்ற பேரறிஞர் பிறந்தார். 25.8.1867-ஆம் ஆண்டில் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோதே அமைதியாக அவர் தனது ஆவியை இழந்தார்.

மாணவ மணிகளே! “என்னுடைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுள், மிக உயர்ந்த கண்டுபிடிப்பு - மைக்கேல் ஃபாரடேதான் என்று விஞ்ஞானி ஹம்பரிடேவி கூறினாரே, அது சரிதானே!