பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் இந்தி மொழி எழுத்தாளர் பிரேம்சந்த் என்பவர் தீராத சீதபேதி நோய் உடையவர். கே.சி.டே எனப்படும் இசை வித்துவான் சிறந்த பாடகர். என்றாலும் அவர் ஓர் அந்தகர்.

தந்தை பெரியார் தனது 95-வது வயது வரை தமிழ்நாட்டிற்கு உழைத்து உழைத்து மாண்ட சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார்.

மூதறிஞர் ராஜாஜி தனது 95-வது வயது வரை அரசியல் அமர்களத்திலே அறிவரிமாக வாழ்ந்துத் தொண்டாற்றியவர்.

அறிஞர் அண்ணா தனது 60-வது வயதிலே தமிழர்களுக்கென தனியாட்சியை உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் புற்று நோய் கிருமிகளுக்குத் தனது உடலைப் பலி கொடுத்து மறைந்தவர்.

பெருந்தலைவர் காமராசர், தனது 70-வது வயது வரை இந்திய அரசியல் முன்னேற்றத்துக்காகவும், தமிழ்நாட்டிற்குக் கல்விக் கண் கொடுத்த கண்ணப்ப நாயனாரைப் போலவும் தியாகம் செய்து பிரம்மசாரியாய் மறைந்தார்.

எனவே, எதிர்கால மாணவ மாணவிகளே! இப்போது நீங்கள் இளைஞர்களாக இருக்கலாம். உங்களிலே சிலர் இப்போதும்கூட உடலுறுப்பு ஊனர்களாகவும் இருக்கலாம். உங்களிடமும் வயோதிகம் மோதும் அல்லவா?

அந்த நேரத்தில் நீங்கள் நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நின்று, எந்தத் துறையில் வாழ்வைத் துவங்குகின்றீர்களோ, அந்தத் துறையில் நீங்களும் சாதனைகளைப் புரிய வேண்டும்! அதுதானே வாழ்க்கையின் அற்புதங்கள்!