பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிகோ துணி முறை பைண்டர் லெயிங்டன்:

| ஆர்ச் பால்டு லெயிங்டன்

மாணவ - மணிகளே!

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டதும், புதுப்புது புத்தகங்களைக் கடைகளில் வாங்குகின்றீர்கள். ஏழை மாணவர்களாக இருந்தால், சென்ற ஆண்டுத் தேர்வில் தேர்ந்து மேல் வகுப்புச் சென்ற மாணவர்களிடம் பழைய புத்கங்களை வாங்குகிறீர்கள்.

இப்போதெல்லாம் ஏழை மாணவர்களுக்கு அரசாங்கமே இலவசமாகப் புத்தகங்களை வழங்குகின்றது. அவற்றைப் பெறும் மாணவர்கள் தங்களது, புதிய - பழைய புத்தகங்களை அழகாக வைத்துக் கொள்ளவும், நூல்கள் கிழிந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளவும், அழகாகப் பைண்டிங் செய்து வைத்துக் கொள்கிறீர்கள் இல்லையா? அந்த நூல் கட்டுமானக் கட்டடப் பணியை முதன் முதல் துணியால் செய்து காட்டிய பைண்டர் இவர்.

பெயர் ஆர்ச் பால்டு லெயிங்டன். 1784-ஆம் ஆண்டு முதல் 1841 வரை வாழ்ந்தவர்.

இலண்டன் மாநகரின் அச்சகம் ஒன்றில் ஆர்ச் பால்டு பைண்ட ராகப் பணி செய்தபோது புத்தகம் கிழியாமல், சிதையாமல், நீண்ட நாட்கள் அழகாக இருக்கத் துணியால் பைண்டு செய்யும் விஞ்ஞான முறையை உலகில் முதன் முதலாகப் புகுத்தி புகழ் பெற்றதால், உலகப் பள்ளி மாணவருலகம் இன்றும் அவரை புத்தகப் பைண்டிங் மூலம் நினைவில் நிறுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, புத்தகங்களைப். பைண்டிங் செய்து வைத்துக் கொள்வது சிறந்த பணி அல்லவா?