பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

கராத்தே போர்க் கலையில், வழக்கமாக ஒரே ஒரு முறை கொடுக்கும் அடியே போதும், அது கைகால் இழப்பு வாதங்கள், கை காதுகளைக் கதிகலங்கவைக்கும் அதிரடி அதிர்ச்சி அடிகளாகவும், அல்லது எதிரிகளைக் கொன்றுவிடும். மரண அடியாகவும் மாறக்கூடும்.

கராத்தே கலையைக் கற்கும் karateka எனப்படும் கராத்தே கலைஞர், செங்கல்லை உடைப்பார். வீடு வேய்வதற்குரிய சுட்டக் களிமண் தகடு ஓடுகளையும், மரத்தால் செய்யப்பட்ட பலகை போர்டுகளையும், அவை போன்ற பிறவற்றையும் உடைத்து நொறுக்கும் பலம் பெற்றவராக அந்தக் கராத்தே கலைஞர் திகழ்வார்.

இவைபோலவே கராத்தே சண்டைகளில் எதிரிகளின் எலும்பு களைத் தவிடு பொடியாக்கிக் காட்டும் சக்தியைப் பெற்றவராகவும் அக் கலைஞர் விளங்குவார்.

கராத்தே கலை என்பது, வெறும் விளையாட்டு வீரப் போர்க்கலை மட்டுமன்று, தத்துவ அடிப்படைகளில் அமைந்த, கை, கால் வீர தீர சாகசப் போர் வித்தைகளையும் அறிவிக்கும் கலை ஆகும். அத்துடன், தன்னடக்க உணர்வுள்ள மன ஒழுக்கத்தையும் கற்பிக்கும் கலை கராத்தே என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்,

[EXCERPTS - Courtesy : "PARTHA")