பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத நாட்டின் பண்டைய விஞ்ஞானப் பெருமைகள்:

சிறுவர், சிறுமிகளே, மாணவர்களே!

இந்திய நாடு தான்-முதன் முதலில், உலகத்திலேயே எண்ணியல் கணித முறையை உலகுக்குக் கண்டுபிடித்துக் கூறியது. ஆர்யபட்டா என்ற கணித மேதை 'ZER0 என்ற சுழியை, இன்மைக் குறி இலக்கத்தை, மொழி இயலில் இலக்கணக் கூறு இல்லாமலே, இலக்கண வ்கையை உணர்த்தும் குறியீட்டைக் கண்டு பிடித்ததாக - இந்தியக் கணித வரலாறு கூறுகின்றது.

பூஜ்யம் என்ற சுன்ன எண்ணைக் கணிதத் துறையில் முதன் முதல் கண்டுபிடித்தவர், உமர்கய்யாம் என்ற உலகப் புகழ்பெற்றக் கவிஞர் என்று பாரசீக வரலாறு அறிவிக்கின்றது.

சைபர் 0 என்ற கணித எண்ணைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்றும், அதைத் தமிழ் நாட்டில் வணிகம் புரியவந்த கிரேக்கர்கள், அராபியர்கள் வணிகத்தோடு வணிகமாக, தமிழர்களின் கணித முறையையும் கடத்திச் சென்றனரென்றும் தமிழ் வரலாறு உணர்த்துகின்றது.

சிறுவர்களே சிறுமிகளே! உங்களுடைய சிந்தனைக்கு இவை சில குறிப்புகள், எதிர்காலத்தில் நீங்களும் ஆராய்ச்சி அறிஞர்களாக வரலாம் இல்லையா? அப்போதும் சில உண்மைகள் வெளியே வரலாம் என்று நம்புகிறோம்.

மாணவ-மணிகளே! உலகத்தில் முதன் முதலாகப் பல்கலைக் கழகம் உருவான இடம் இந்தியாதான். இந்தியாவின் வடக்கே, பஞ்சாப் மாநிலப் பகுதியில் தட்சசீலம் என்ற ஒரு மாநிலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டில், அதாவது, இன்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.