பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 267

எடுத்துக்காட்டாக, சித்தார்த்தர் அரசர் மரபில் தோன்றினார் மனித வாழ்க்கையின் துன்பங்களை நீக்கி, அவன் நல்வாழ்க்கை வாழ்ந்திட என்ன வழி என்று அவர் சிந்தித்தார்! ஆண்டியானார்! புத்தரும் மனிதனைவிடப் பல மடங்கு துன்பங்களை அனுபவித்தார். இறுதியாக ஆசையை விடு, உயிர்கள் மீது கருணை காட்டு, என்ற நெறிகள் பலவற்றை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தார்.

ஆனால், பெளத்த மதத்தை அவர் துவக்கவில்லை. வெறும் நெறிகளை, தத்துவங்களை, அவரது குறிக்கோள்களை, கொள்கைகளை மட்டுமே மக்களிடம் புத்தர் கூறினார்; பரப்பினார்; அவ்வளவு தான்!

கெளதமருக்குப் பிறகு வந்த அவருடைய சங்கத்தினர்கள், அந்தக் கொள்கைகளைத் திரட்டி நூலாக்கி, பெளத்த மதம் என்று பெயரிட்டார்கள். வெளி நாட்டார் அந்தக் கொள்கைகளைப் BUDDHSM என்றார்கள். இது தான் மாணவர்களே இசம் தோன்றிய முதல் வரலாறு. 1SM என்றால், பொருள் என்ன தெரியுமா? "தனிக்கொள்கை’, கோட்பாடு', 'தனிப் பழக்க மரபு என்கிறது.

எனவே, இசம் என்றால்; மனித வாழ்க்கையை வளமாக்கக் கூடியத் தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட கொள்கைகள் தொகுப்பு, என்பதே உண்மை. அதற்கான எடுத்துக்காட்டுத் தான் BUDDHSM அதாவது பெளத்தம் என்று குறிப்பிட்டோம்.

வர்த்தமான மகாவீரர் உருவாக்கிய சித்தாந்தங்களைச் அமணர்கள் ‘சமணம் என்றார்கள்! அதுதான் JANSM.

இந்து மத ஞானிகள் தோற்றுவித்த தத்துவச் சிந்தனைகளுக்கு 'இந்துயிசம்: HNDUISM என்று பெயர் வந்தது.

கிறித்துவ மதத்தின் தாய் பிரிவான ரோமன் கத்தோலிக்கர் குறிக்கோள்களே ரோமனிசம் ROMANSM ஆனது.

பகுத்தறிவுக் கொள்கைகள் சார்பாளரை ரேஷனிலிஸ்ட் RATIONALIST என்றும், அதற்கான தத்துவங்களைப் பகுத்தறிவு வாதம் RATIONALSM என்பர் உலக அறிஞர் பெருமக்கள்.

முற்போக்கு எண்ணமுடையக் கட்சியினரின் தீவிரவாதத் தத்துவங்கள் ரேடிகலிசம் என்ற பெயரைப் பெற்றது.

ஓர் ஆட்சியினுடைய செயல்களைக் கடுமையான நடவடிக்கைகள் என்று மக்கள் நினைப்பார்களானால், அதனை சிவப்பு நாடா REDTAPISM என்பர். ஒரு பொருளின் இடையுறவுத் தொடர்பு இருப்பதுடனல்லாமல், வேறு அறிவு இல்லை என்ற கோட்பாடுகளுக்குரிய தத்துவங்களுக்கு "ரிலேட்டிரிசம் REIATRISM என்று கூறுவர் அறிஞர்.