பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

மனித இன நலக் கொள்கைகளை; மனிதத்துவத்தின் வாழ்க்கை இயல்களை, ரோமாபுரி, கிரேக்க நாடுகளில் பின்பற்றிய மக்களது பண்புகளை ஹியூமனிசம் HUMANISM என்று புகழ்கிறது வரலாறு.

ருஷ்ய நாட்டின் விடுதலைப் போர் மேதை லெனினுடைய, பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு லெனினிசம் (Leninism) என்று பொதுவுடமை தத்துவம் கூறுகிறது.

செர்மன் நாட்டின் சமவுடைமைவாதி, பொதுவுடைமைப் பிதாமகன் என்று இன்றும் உலகத்தவரால் போற்றப்பட்டு வரும் கார்ல் மார்க்ஸ் தனிக் கொள்கைகளை மார்க்சிசம் MARKSISM என்றும் அதனைப் பின்பற்று பவர்களை MARXIAN அல்லது மார்க்சிஸ்டுகள் என்று அழைப்பர் மக்கள்! ஸ்பானிய அரசுரிமைக் குழப்பத்தில் நான்காம் சார்லசின் இரண்டா வது மகனாகிய டான் கார்லஸ் DONCARL0S என்பவருக்கு ஆதரவு தந்தக் கட்சியினர் கொள்கை கார்லிசம், (CARLISM) என்று அழைக்கப் . لقياساساً لا

பேரரசு ஆட்சி முறைகளுக்கு, பல நாடுகளைத் தனது அதிகாரத் திற்குக் கட்டுப்படுத்தி ஆளுகின்ற அரசுக் குறிக்கோள்களுக்கு இம்பீரியலிசம் (IMPERIALSM) என்பது பெயர்.

இரண்டாம் உலகப் போர்க்கள வன்முறை நாயகனாக உலகையே உலுக்கிய மாவீரன் அடால்ப் இட்லரின் போர் மரபுகளை, நாஜிசம் <ɛspɛog HİTLERISM Steinuit.

சமுதாயத்தில் போக்கிரித்தனமான கலகங்களை, கலவரங்களை உருவாக்கிச் சட்டத்தை மீறிச் செய்கின்ற தத்துவங்களுக்கு HOOLIGANSM, ஹலிகனிசம் என்பதாகும்.

தாய் நாட்டுப் பற்றால், அதன் நலன்களுக்காக உழைத்துத் தியாகம் செய்யும் தேசாபிமானத்தின் தியாகத்திற்கு PATRIOTSM பேட்ரியாட்டிசம் என்று பெயர்.

ஆங்கில இலக்கிய சிந்தனையாளர் தாமஸ் கார்லைல் கோட்பாடுகளுக்கு கார்லைலிசம் (Carlylism) என்பர் கல்வி மான்கள். உலகப் பெருங் கவிஞர்களான ஷெல்லி, பைரன், வோர்ட்ஸ் வொர்த், சேக்ஸ்பியர் போன்ற கவிஞர்களும், அவர்களது குழுவினர் களும் பின்பற்றும் சில பண்புகளுக்குப் பேய்த் தன்மைகள், கெடு நடவடிக்கைகள், தீ நெறிச் சேரல்கள் என்ற ஒரு பெயருண்டு. அந்தப் பெயரை ஒழுக்கம் ஓம்பிகள் சேட்டனிசம் SATANSM) என்று சொல்வார்கள். சந்தர்ப்பவாதியாய், பச்சோந்தி குணமாய், சுயநலவாதியாய், கால நேரத்துக்கு ஏற்றவாறு மாறி மாறி நடப்பதற்குரியவர்களை ஆப்பர்சூனிசம் OPPORTUNISM என்று சொல்கிறது தத்துவம்.