பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

அந்த நகரிலே இருந்த சில தொழில்நுட்பத் திறமையுடையவர் களை இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தார். கூட்டன்பெர்க், 1436-ஆம் ஆண்டில் கலைத் துறை நுட்பம் சார்ந்த ஓர் இயங்கும் அச்சுக் கூடத்தைத் துணிகரமாகத் துவக்கினார்.

அந்தக் காலத்தில் புத்தகத்தை உருவாக்கி விற்பனை செய்யும் தொழில் மிக லாபகரமாக நடந்து வந்தது. நூலொன்று உருவாக்க வேண்டுமென்றால், அந்தப் புத்தகச் செய்திகளை முதன் முதலில் கையெழுத்தாக எழுத வேண்டும். அதற்குரிய கால் அளவு இரண்டு வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும்.

கூட்டன்பெர்க் முதன் முதலாகக் கண்டுபிடித்ததுதான் அந்த அச்சுக்கூடம். அதை இயந்திரத்தால் இயங்கும் அச்சகம் என்றும் சொல்வார்கள். கூட்டன்பெர்க் அந்தக் கலையைப் பல வகைகளில் இயக்க முடியும் என்ற திறமை பெற்றிருந்ததே அதற்குக் காரணமாகும்.

அதே நேரத்தில் சீன நாட்டில் ட்ஸ்எய் லூன் (Te'ailur) என்பவர் முதன் முதலாக அச்சடிக்கும் தாள் கண்டுபிடித்தார். அது உலகெல்லாம் பரவியிருந்ததால், செர்மன் நாட்டிலும் அந்தப் பேப்பர் கிடைத்தது.

அக்காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட அச்சு வடிவங்களைப் பேப்பர் மீது படியுமாறு அழுத்திப் பதிய வைத்து அதைக் கைகளால் அச்சு எடுப்பார்கள். அந்த அச்சு வடிவம் நீண்ட ஸ்குரு வடிவமாக, அதாவது மேல் வரி அல்லது அகழ் வரிச் சுற்றுடைய நீள் திருகாணியையுடைய தாக இருக்கும். மரப் பலகையைக் கொண்டு அதை அழுத்துவார்கள்.

சீன நாட்டில் பதினொன்றாம் நூற்றாண்டில் பிஷெங் (Pi Sheng) என்பவர் ஈய உலோகத்தால் நகரும் அச்சுக்களைக் கண்டுபிடித்த பின்பு கூட்டன்பெர்க் கடினமான ஈய மெட்டலைக் கொண்டு அப்போது புகழ் பெற்றிருந்த லத்தீன் மொழி எழுத்துக்களைப் பின்னோக்கி அச்சாகுமாறு இன்றைய ரப்பர் ஸ்டாம்பு வடிவத்திலே செய்தார்.

ஒவ்வொரு எழுத்தும் மென்மையான ஈய உலோக மெட்டலில் அச்சுப் போல அல்லது (Mould வார்படம் போன்ற உருவத்திலே அதைச் செய்தார். ஆன்டிமோனியம், தகரம் போன்ற உலோகம் இரண்டும் உருக்கிய குழம்பு போன்ற ஈயத்தை வார்ப்படத்தில் வார்த்து, ஒரே எழுத்தை ஏராளமான அளவு செய்வார். இவ்வாறு எல்லா எழுத்துக் களையும் ஈய உலோக உருக்களால் செய்து விடுவார் கூட்டன்பெர்க்,

பிறகு, அதே அச்சுக்களை நீளமான வரி வடிவத்திலே கோர்ப்பார். சொற்கள் கோர்க்கப் பட்ட பிறகு அவை வாக்கியங்களாக உருப் பெறும். இவ்வளவையும் கூட்டன்பெர்க் அப்போது மக்கள் பேச்சு வழக்கிலே இருந்த லத்தீன் மொழியிலேயே முதன்முதலாகச் செய்துக் காட்டினார்.