பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி - 37

வாக்கிய வரி வடிவங்களாக்கி - கோர்க்கப் பட்ட வரிசைகளை, நன்றாக - இறுக்கமாகப் பக்க வடிவத் தோற்றமாக்குவார். இப்படியே வரி வடிவங்கள் பக்கங்களாக மாறும்.

பக்கமாக்கப்பட்ட அச்சு வடிவம் மேலே, மையைப் பரப்பித் தாளை அதன் மேலே அழுத்திப் பதிய வைத்து இறுக்குவார்கள். அவை அச்சடிக்கப்பட்ட பக்கங்களானதும், மறுபடியும் அந்த அச்சுக்களைக் கலைத்து மீண்டும் அச்சுக் கோர்த்துப் பக்கங்களாக்குவார்கள். அதனால், அடுத்தடுத்த செய்திகளை, பக்கங்களாக்கி, எண்களைப்போட்டு அச்சடிப்பார்கள். *.

புத்தகப் பக்கங்களில் ஒரே மாதிரியான அச்சுக்களையே கோர்க்க மாட்டார்கள். செய்திகளின் முக்கியத்துவத்திற் கேற்றவாறு, பல்வேறு உருவ, சிறிய - பெரிய அச்சு எழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

ஒவ்வொரு அச்சு எழுத்தும் நகரும் தன்மையிலே எடுத்தெடுத்து, கலைத்துக் கலைத்து மீண்டும் வரிகளைப் பக்கங்களை உருவாக்கும் வகையிலேயே அச்சுக்கள் தனித்தனியே இருக்கும். அவ்வாறு இருந்தால்தான் இறுக்கப்பட்டுக் கட்டப்பட்ட அந்த அச்சடிக்கப் போகும் பக்கங்களிலே உள்ள தவறுகளை கூட்டன்பெர்க்கால் பிழைகளைத் திருத்த முடியும். அச்சடிக்கத் தயார் என்ற நிலையில் பக்கங்கள் உருவாகி விட்டால் அதிலே மறுபடியும் திருத்தங்களைக் கூட்டன்பெர்க் செய்யாமல் நிறுத்திக் கொள்வார். .

உலகத்தில் அப்போது போர் மூண்டது. அந்தப் போர்க் காலம் முடிவுற்ற பின்பு கூட்டன்பர்க் மறுபடியும் தனது சொந்த ஊரான மெயின்ஸ் நகருக்கு வந்து அச்சுக் கூடம் ஒன்றை நிறுவினார். அதில் என்னென்ன மாற்றங்களை, வளர்ச்சிகளை படிப்படியாகச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்து அழகான கலை வளர்க்கும் அற்புதக் கூடம் எனது அச்சகம் என்று தனது அச்சகத்தை மக்களிடையே விளம்பரப்படுத்தினார்.

ஜோஹன்னெஸ் தனது நண்பர்களிடம் பணம் கடன் பெற்று முதலீடு செய்ததுடன், அவரும் தொழிலாளியோடு தொழிலாளியாக அச்சகத்தில் பணியாற்றினார். அச்சகத்தை அவர் துவக்கியபோது அக் காலத்திலிருந்த பழமையான, புதியதான பாடல்களை, துண்டறிக்கை களை, அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிச் சம்பவங்களை, ஜோதிடக் கணிப்புச் செய்திகளை, ஆண்டு காலண்டர்களை எல்லாம் அச்சடித்து மக்கள் தேவைக்கேற்றவாறு வழங்கி வருவாய் தேடினார். இன்றைக்கு எவை மக்கள் தேவைக்கு ஏற்ற அச்சு வேலைகளோ அவையெல்லாம் அன்றும் ஜாப் பிரிண்டிங் என்ற பெயரையே பெற்றிருந்தன.