பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 83

சுடப்பட்டு கொலையானபோது, 'ஹே ராம் "Hey Ram' என்ற இறை நாமம் ஒன்றையே முனகினார் - தாழ்.குரலில் அவர் இறையிடம் முறையிட்டார்.

ஆனால், சிலர் சாகும் தருவாயில் இருக்கும்போது இறைவனின் பெயரையே உச்சரிக்கமாட்டார்க்ள். அவர்களிலே ஒருவர் மாவீரன் நெப்போலியன்.

நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சு சக்கரவர்த்தி. அவர் சாகும் நேரத்தில் என்ன கூறினார் தெரியுமா? அவருடைய காதலியான மனைவி ஜோசப்பின் பெயரைத்தான் கூறினார்! அந்தப் பெயரை இரண்டு வார்த்தைகளால் ஜோசப்பின் - ஜோசப்பின் என்றே கூறித் தனது இறுதி மூச்சை விட்டார்.

பிரிட்டிஷ் கடற்புடைத் தலைவராக இருந்த ஹொராஷ்யோ நெல்சன் என்பவர், தனது அரசு பதவி ஒன்றையே தனது மரண நிலையிலும் நெஞ்சார நினைத்தார்.

அந்த மாவீரன் ட்ராஃபல்கர் என்ற கடற்படைப் போர் முனையிலே யுத்தம் செய்து, உடலில் பெரிய காயமடைந்து படுத்தப் படுக்கையாக மருத்துவ சிகிச்சைச் செய்து கொண்டிருந்தார்.

நெல்சன் சாகும் நேரத்தில், போர் முனையில் இருந்த அவரது படைகளின் வெற்றிச் செய்தியை அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கூறிய நன்றி யாருக்குத் தெரியுமா?

கடவுளுக்கு! கடவுளுக்கு வணக்கம்."நான் எனது கடமையை flopoeups solo GLsir” ("Thank God, I have done my duty") Störgy மகிழ்ச்சியோடு கூறி நெல்சன் உயிர் விட்டார்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சர் வால்டெர் ராலிக். அவர் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் - எதையும் துணிந்து செய்யக் கூடிய வல்லாளர். அரசியலில் அத்தகையத் துணிவுடன் அவர் நடப்பவரானதால், பொறாமை கொண்ட சில அரசியல்வாதிகளால் அவருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தது.

தண்டனையை நிறைவேற்றும் கொலைகாரர்கள் அவரது தலையைக் கொலைக் கருவியின் முன்பு நீட்டச் செய்யும்போது, "உனது தலையைக் கிழக்குத் திசை நோக்கி வை' என்றார்கள்.

“தலையை எப்படி வைத்தால் என்ன என்பதல்ல முக்கியம். எனது இதயம் சரியாக இருக்கின்றதா? என்பதே முக்கியம்' என்றார் சர் வால்டர் ராலிக் - அமைதியாக!