பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

அந்தச் சில விநாடிகளில் அவருடைய மனத் துணிவு கம்பீரமாகக் காட்சியளித்தது. தலை துண்டானது. எனவே, சர் வால்டர் ராலெய்க் சாகும்போது தனது வீரத்தையே வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் சுதந்திரத்திற்காகத் தீச்சுடர் போலப் போராடிய மாவீரர் நதான் ஹேல் என்பவர் துக்கு மேடையில் நிறுத்தப்பட்டார். தூக்குக் கயிறு அவர் கழுத்தைச் சுற்றி நெருக்கும்போதுகூட, 'ஐயகோ! நான் பெற்ற ஒரு வாழ்க்கையை எனது தாய் நாட்டிற்காகவே இழக்கிறேன் என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.

பிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற வீரச் சொற்பொழிவாளர் ஜார்ஜஸ் டாண்டன் என்பவர். பிரெஞ்சுப் புரட்சியை நடத்திய வீரப் பெரு மக்களுள் ஒருவர். அவர் கில்லட்டின் என்ற பயங்கரக் கொலைக் கருவியின் முன் தனது தலையை நீட்டும்போது, கொலைகாரர்கள் முன்பு என்ன முழக்கமிட்டார் தெரியுமா?. "எனது துண்டிக்கப்பட்ட தலையை மக்களிடம் கொண்டு போய் காட்டுங்கள். அவர்களால் எனது தலையை தினந்தோறும் பார்க்க முடியாது அல்லவா?” என்றார்.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் என்றாவது ஒரு நாள் சாக வேண்டியவர்கள்தான். ஆனால், மரணத்தின் இருளில் அவர்களில் சிலர் தங்களது நம்பிக்கை ஒளியைக் காண்பார்கள்.

பெத்தோவன் என்ற இசைமேதைக்கு காது செவிடு அவர் தனது மரணப்படுக்கையில் இருந்தபோது கதறினார். "எனது சங்கீத ஒலியை நான் மோட்ச லோகத்தில் கேட்பேன்" என்றார்.

எனவே, மாணவர்களே உலகத்தில் வாழ்ந்த பெரிய மேதைகள் எல்லாம் செயற்கரிய செயல்களைச் செய்தார்கள். அவர்கள் மரணம் அடையும்போதுகூட, தங்களுடைய தொண்டுகள்மீது சாகா ஆசைகளை வைத்துக் கொண்டுதான் மரணமடைந்தார்கள்.

ஏனென்றால், அவரவர்கள் செய்த மக்கள் சேவைகளைத் தெய்வமாக மதித்தார்கள். அந்தப் பெருமைகளோடு கடைசி நேரத்தில் சாவதுதான் அவர்கள் உலகுக்கு வைத்துவிட்டுச் சென்ற பிறப்புரிமைக் கடமையின் அடையாள வாழ்க்கை முடிவுகள் ஆகும்.

மாணவமணிகளே! நாமும் நாம் செய்யும் தொழில்களையே - நம்பிக்கையோடு போற்றிச் சாகவேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நிலையாமைச் சூழ்நிலைதானே!