பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

‘நாம் ஏழை என்பதால் தானே செட்டி மகள் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று மனைவியிடம் வருத்தப்பட்டான் ஆனந்தன்.

மனைவி புறப்படத் தயாரானாள்.

அப்பொழுது, “எனக்கு ஒரு புதுயோசனை தோன்றியுள்ளது. செக்குமாடுபோல், கணக்கு வேலை பார்த்து எப்படி முன்னேற முடியும்? ஏதேனும், ஒரு தந்திரத்தைக் கையாண்டால் தான் மதிப்போடு, பணமும் சம்பாதிக்க முடியும். செட்டி வீட்டுக்கு பலர் வருவார்கள். பேச்சுவாக்கில், என் கணவர் ஞான திரு டி மூலம் சோதிடம் கூறுவார். தெய்வீக சக்தி பெற்றவர் என்று சொல்லு” என்றான். “உங்களுக்குச் சோதிடம் தெரியாதே, பொய் சொல்லலாமா?” என்றாள் அவன் மனைவி.

“பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்; தந்திரம்! அது ஒரு வகையான சாமர்த்தியம்” என்றான் ஆனந்தன்.

செட்டி வீட்டுக்கு ஆனந்தன் மனைவி சென்றாள். மறுநாள், செட்டி வீட்டில் ஒரே பரபரப்பு. திருமணத்திற்கு மாப்பிள்ளை வந்த குதிரை காணாமல் போய்விட்டது. எங்கே தேடியும் குதிரை போன சுவடே தெரியவில்லை.

அப்போது, “என் கணவர் தெய்வீக அருள் பெற்ற சோதிடர், காணாமல் போன குதிரையைப் பற்றி, அவரிடம் கேட்டால், ஞானதிரு டி மூலம் சொல்லக் கூடியவர்” என்று செட்டியிடம் ஆனந்தன் மனைவி சொன்னாள்.

உடனே செட்டி, ஆனந்தனைத் தேடிச் சென்று வேலை மிகுதியால், திருமணத்திற்கு உங்களை அழைக்க மறந்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்று கூறி, “குதிரை காணாமல் போய் விட்டது, அது கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டான்.