பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

உணவில் ஒரு பிடி அள்ளி வீசக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டது.

“ஏ, மடக் காகமே! உனக்குமா பசி? விடியற்காலையில் எழுந்திருக்கும் சுறுசுறுப்பை உன்னிடமிருந்து தானே நான் கற்றுக் கொண்டேன். உன் பசியை தீர்த்துக் கொள்ள உனக்கு வழி தெரியவில்லையா?” என்று கேட்டான் அவன்.

“நீ தான் அதற்கான ஒரு வழியைக் கூறக் கூடாதா?” என்று கேட்டது காகம்.

“இதற்குத் தான் பகுத்தறிவு வேண்டும் என்பது” என்றான். அவன் அருகில் இருந்த ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடமட என்று குடிக்கத் தொடங்கினான் அவன்.

சமயம் பார்த்திருந்த காகம், அவனுடைய இலையிலிருந்து உணவைத் தூக்கிக் கொண்டு வேகமாகப் பறந்து போயிற்று


14
பணக்காரனுக்குத் தூக்கம் வருமா?

பல தொழில்களை நடத்திக் கொண்டிருந்தார் ஒரு செல்வந்தர்.

ஒரு நாள் நள்ளிரவு. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

சகல உயிரினங்களும் கூட தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தன. ஊரே அமைதியாகக் காணப்படுகிறது.

ஆனால், செல்வந்தருக்கோ தூக்கம் வரவில்லை. மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். சிறிது தொலைவில், திண்ணையில்