பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அதன்பின், தன்முன் கொண்டு வந்து நிறுத்துமாறு உத்தர விட்டான் அரசன்.

தன் தந்தையுடன் வீட்டுக்குச் சென்ற இரத்தினம், உண்ணாமலும், உறங்காமலும் கலக்கம் அடைந்தான்.

மேலும், மரணபயம் அவனைச் சூழ்ந்தது. துடியாய்த் துடிக்கலானான். ஏக்கத்தால் உடல் மெலிந்தது; உள்ளம் வெதும்பி நோய் வாய்ப்பட்டான்.

அரசன் அளித்திருந்த மூன்று மாதக் கெடு தீர்ந்தது. மறுநாள், அரசன்முன் வந்து இரத்தினம் நின்றான். அவனைப் பார்த்து, “ஏன் இப்படி எலும்பும் தோலுமாய் இளைத்து விட்டாய்? உண்ணாதே, உறங்காதே என்று நான் கட்டளை இடவில்லையே?” என்றான் அரசன்

“மரணம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, உண்பதிலும், உறங்குவதிலும் மனம் செல்லவில்லை” என்றான் இரத்தினம்

அரசன் பலமாகச் சிரித்தான். “இரத்தினா! ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிர் எவ்வளவு உத்தமமானது என்பதை இப்பொழுதாவது உணர்ந்து கொண்டாயா? அந்த உயிர் வதைக்காக ஜீவகாருண்யம் காட்டும் கொள்கை எவ்வளவு உயர்வானது என்பதை உணர்கிறாயா? மற்றும், மரண பயம் எவ்வளவு கவலை அளிக்கக் கூடியது, என்பதையும் அனுபவித்து விட்டாய். இத்தகைய மரண பயத்திலிருந்து தெளிவடையக் கூடிய வழியைக் காட்டும் புத்த மதக் கொள்கைகள் எத்தகைய சிறப்பு உடையவை என்பதை எண்ணிப்பார்! புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டு முக்தி அடைய வழிபடுவாயாக!” என்றான்.

“அரசே! நான் குற்றம் நீங்கியவனாகி விட்டேன். வீடுபேறு அடைவதில் எனக்கு ஆவல் உண்டாகிறது, அதைப் பற்றி