பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

கொண்டிருந்தான் பெரிய பையன். ஆனால், அவன் சிறுவனை ஒரு அடிகூட அடிக்கவில்லை.

அதைக் கவனித்த ஒருவர், பெரிய பையனிடம், “அவன் யார்?” உன் தம்பியா? என்று கேட்டார்.

“அடுத்த வீட்டு பையன்!” என்றான் பெரிய பையன்.

சிறுவன் உன்னை அடித்த போதிலும் நீ ஏன் திருப்பி அடித்திருக்கக் கூடாது? என்றார் அவர்.

“அவனோ சிறுவனாக இருப்பதால், அவனை அடிக்க எனக்கு மனம் இல்லை” என்றான் பெரிய பையன்.

‘அவன் ஒரு பண்புள்ள பையன்’ என்று எண்ணி மகிழ்ந்தார்.

வலிமையுள்ளவன் எளியவனை தாக்குவது வீரத்தனம் ஆகுமா?


32
பால்கோவாவுக்காக உயிரை விட்டவன்

ஒரு சிற்றூரில் செட்டி ஒருவன் இருந்தான். அவன் ஒரு கஞ்சன்.

அவன் மளிகைக் கடை வைத்திருந்தான். எவருக்குமே கடன் கொடுக்க மாட்டான்.

தர்மம் என்பதே அவனுக்குத் தெரியாது. ஒரு காசுகூட அவன் பிச்சை போட்டதில்லை.

செட்டிக்கு மனைவி மட்டுமே இருந்தாள். குழந்தைகள் இல்லை.