பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

35
பிறவிப் பகை நட்பாக முடியாது

ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும் வசித்து வந்தன.

கீரியும், எலியும் மரத்தின் வேரின்கீழ் உள்ள வளைக்குள் தனித் தனியாக வசித்தன.

பூனை, மரத்தின் அடியில் உள்ள பெரிய பொந்தில் வசித்தது. ஆந்தை, மரத்தின் உச்சியில் இருந்த ஒரு பொந்தில் வசித்தது.

எலியின் நிலைமைதான் பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. ஆந்தை, பூனை, கீரி இவற்றின் கண்களில் படாமல், எலி தினமும் இரை தேட வேண்டியதாயிருந்தது.

ஆந்தைக்குப் பகலில் கண்தெரியாது, அதனால் இரவில்தான் இரை தேடுவது வழக்கம்.

பூனையோ பகலிலும் இரவிலும் அருகில் இருந்த வயலுக்குச் சென்று பயமின்றி இரைதேடித் தின்று வந்தது.

பூனையைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன், வயலுக்குப் போகும் வழியில், கண்ணி வைத்துவிட்டுப் போனான்.

வழக்கம் போல், எலிகளைப் பிடிக்கச் சென்ற பூனை, வேடன் போட்டிருந்த கண்ணியில் சிக்கிக் கொண்டது, தப்பிக்க வழி இல்லை.

சிறிது நேரத்தில், பதுங்கிப் பதுங்கி, திருட்டுத் தனமாக, இரை தேடி வந்த எலி, கண்ணியில் சிக்கிக் கொண்டிருந்த பூனையைக்