பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 மாணிக்கவாசகர்



மேலோங்க அவற்றை நோக்கிக் கைவீசியாடும் மகளிரது விளையாட்டு. இதன் விவரம் அறியக் கூடவில்லை. இதன் கருத்து "பிரபஞ்ச சுத்தி-ஆன்மாக்களைச் சுத்திகரித்தல்” என்று பழைய குறிப்புக் கூறும். உலக வாழ்வைச் சதமென் றெண்ணி கானல் நீரைக் கைநிறைய அள்ளிக் குடிக்கும் அறிவிலி போலாகாமல்,என்றும் பிறந்திறந்து மயங்காமல் சித்தம் சிவமாக்கிச் செய்வன எல்லாவற்றையும் தவமாக்குகின்ற அத்தன் கருணையினால் நாம் தோள் நோக்கம் ஆடுவோம்" என்பன போன்ற பகுதிகள் ஆன்மாக்களின் மலத்தை அகற்றிச் சிவஞானத்தைச் சேர்ப்பிக்கின்ற மறைமொழிகளாய் இருத்தலின் பிரபஞ்ச சுத்தி ஆயிற்றுப் போலும்.

  சித்தம் சிவமாக்கிச்
     செய்தனவே புண்ணியமாய் 
  அந்தன் செயும் கருணைக்கு
     ஆராமையுள் மிகுந்து 
  பொத்திய கைகொட்டிப்
     புகழ்தல் தோணோக்கம்

என்பது திருவாசக உண்மை.

இப்பனுவலில் 14 பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல் களில் ஆழங்கால் படுவோம்.

  புத்தன் முதலாய
     புல்லறிவிற் பல்சமயம் 
  தத்தம் மதங்களில்
     தட்டுளுப்புப் பட்டுநிற்கச் 
  சித்தம் சிவமாக்கிச்
     செய்தனவே தவமாக்கும் 
  அத்தன் கருணையினால்
     தோணோக்கம் ஆடாமோ (6)

(புல்லறிவு - சிற்றறிவு: த ட்டுளுப்புப் பட்டு - தடுமாற்ற மடைந்து)