பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 மாணிக்கவாசகர்



(வள்ளல் - கைம்மாறு கருதாதி உபகரிப்பவன்; புதுமது . புதிய அமுதம்)

என்பது இப்பதிகத்தின் இரண்டாவது பாடல். இங்கு அடிகள் திருவைந்தெழுத்தாய மந்திரத்தை ஓம்’ என்னும் பிரணவத்துடன் போற்றி உலகம் உய்யத் திருவாய்மலர்ந்தருளிய அன்பின் திறத்தைக் காணலாம். இங்ஙனம் இறைவனின்பேரருளின் திறம் வெல்க வெல்க (சயசய) எனப் போற்றிப் பரவும் முறையீடாக அமைந்த இப்பதிகத்திற்குச் 'சிவனுடைய வெற்றிப்பாட்டிரங்கல் என்று கருத்துரை வழங்குவர் பின்னுள்ளோர் (அருணகிரிமுதலியார்)

அடுத்தது,

  போற்றிவிப் புவன நீந்திக்
     காலொடு வான மானாய் 
  போற்றியெவ் வுயிர்க்குங் தோற்ற 
     மாகிநீ தோற்ற மில்லாய் 
  போற்றியெல் லாவு யிர்க்கும்
     ஈறாயி றின்மை யானாய் 
  போற்றியைம் புலன்கள் நின்னைப்
     புணர்கிலாப் புணர்க்கை யானே (10) 

(காலொடு - காற்றுடன், ஈறுஆய் - முடிவாகி; புணர் கிலா - அணுகப் பெறாத)

என்ற பத்தாம் பாடல். "இதில் சுட்டப்படுகின்ற இந் நிலம், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஆயினாய், வணக்கம்: எல்லா உயிர்களும் தோன்றுதற்குக் காரணன் ஆகி நீ ஒன்றிலும் தோன்றுதல் இலன் ஆனாய், வணக்கம்; எல்லா உயிர்களும் ஒடுங்கும் இடனாய் நீ ஒன்றிலும் ஒடுங்குதல் இலன் ஆனாய், வணக்கம்; மனத்தோ டியைந்த ஐம்புலன்களும் நின்னைச் சார்தல் இல்லாதபடி சார்ந்திருப்பவனே, வணக்கம்’ என்கின்றார்.