பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 மாணிக்கவாசகர்



எங்ஙனம் முடியுமோ என்ற மனக்கவலையுடன் துயில் கொள்ளுகின்றார். இந்நிலையில் உறவினர்கள் வந்து அடிகளை எழுப்பி அரசன்பால் அவர் நடந்து கொண்டது நெறியற்ற செயல் என அறிவுறுத்துகின்றனர். வாதவூரா அவர்களை நோக்கி,

  சுற்றமும் தொடர்பு நீத்தேம்
     துன்பமும் இன்பு மற்றேம் 
  வெற்றுடன் மானந் தீர்ந்தேம்
     வெற்றுக்கைமேல் வெறுக்கை வைத்தேம் 
  செற்றமும் செருக்கும் காய்ந்தேம்
     தீவினை இரண்டும் தீர்ந்தேம் 
  கற்றைவார் சடையான் கோலம்
     காட்டியாட் கொண்ட அன்றே. 

(வெறுக்கை - பொருள்; வெறுக்கை - வெறுப்பு; செருக்கு சினம் )

  தந்தைதாய் குரவன் ஆசான்
     சங்கரன் நிராசை பெண்டிர் 
  மைந்தர்பல் உயிரும் கற்ற 
     மாசிலா ஈசன் என்பர் 
   அந்தமில் பிறவி ஏழும்
      அடுபகை எனாது ஓர்ந்தேம் 
   எங்தையார் கருணை காட்டி
      எம்மையாட்கொண்ட அன்றே. 

(மாசு - குற்றம்: அடுபகை கொல்லும், பகை; ஒர்ந் தேம் - அறிந்தேம்)

என்று கூறுகின்றார். 'உமக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. எனக்கு உலகத்தில் வெறுப்பும் இல்லை; விருப்பும் இல்லை


1. வாதவூரடிகளுக்கு- 83, 84