பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 மாணிக்கவாசகர்



வழைத்துத் தன்னருகே அமர்த்தி அவருக்கு ஆறுதல் கூறுகின்றான்; தான் செய்த பிழையினைப் பொருத்தருளுமாறும வேண்டுகின்றான். இந்நிலையில் குதிரை வீரர்கள் குதிரையை நடத்திக் கொண்டு உடன்வர இறைவனும் அழகியதோர் பரிமேல் அமர்ந்து அரசவீதி வழியே வருகின்றார். பரிமேலழகராய் வந்தருளியபோது அவரது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்ட இளமகளிர் வாக்காக அடிகள் அன்னைப் பத்தினை அருளுகின்றார். குதிரைகளை நடத்தி வந்த வணிகச் சாத்தினர் அனைவரும் உருவம், பருவம் முதலிய வற்றால் ஒத்த இயல்பினராக இருத்தலைக் கண்ட பாண்டியனுக்கு ஒரே வியப்பு. அடிகளை நோக்கி "இவர்களுள் தலைவர் யார்’ எனக் கேட்கின்றான். அடிகளும் "இப்போது குதிரையின் முன்னே வந்து தோன்றுவர"எனக் கூறுகின்றார். இவ்வளவில் சிவபெருமான் வெள்ளைப் பரிமீது முன் வந்து தோன்றுகின்றார். வந்தவர் "அரசரே, சிறிது நேரம் கண் இமையாதிருந்து காண்பீராக" எனக் கூறிக் குதிரையின் பல வகைக் கதிகளையும் தாம் அமர்ந்து வந்த குதிரையைக் கொண்டு நடத்திக் காட்டுகின்றார். அவருடன் போந்த குதிரை வீரர்களும் தத்தம் குதிரையினை அவ்வண்ணமே நடத்திக் காட்டுகின்றனர். இதனைக் கண்ணுற்ற மன்னன் அவ்வீரர்களை நோக்கி நும் தலைவர் யார்?' என வினவ, அவர்களும் தம்முடன் வந்த இறைவரைச் சுட்டிக் காட்டி "யாவர்க்கும் தலைவர் இவரே" எனத் தெரிவிக்கின்றனர்.

குதிரைச் சேவகனாகிய இறைவனைக் கண்ட பாண்டியன் வியப்பினாலும் களிப்பினாலும் தன்னை மறக்கின்றான். கைகளை தலைமேற்குவித்த வண்ணம் வணங்குவதற்கு எழுந்தவன் தான் ஒரு குதிரைப் பாகனை வணங்குதல் தக்கதன்றென நினைத்து வாளாஇருந்து விடுகின்றான். அங்கிருந்தோர் அனைவரும் பரிப்பாகனாகிய