பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மாணிக்கவாசகர் அடைக்கலத்தை வைணவர்கள் சரணாகதி, பிரயத்தி என்ற சொற்களால் குறிப்பிடுவர். சுவாமி தேசிகன் காஞ்சிப் பேரருளாளன் திருவடிகளைச் சரணமடைவதுபற்றி அடைக்கலப் பத்து' என்ற பத்துப் பாசுரங்களடங்கிய பதிகம் ஒன்றினை அருளிச் செய்துள்ளார். அத்திகிரி அருளாளர்க் கடைக்கலநான் புகுந்தேனே' என்றே முதற் பாசுரம் முடிகின்றது. ஆழ்வார்கள் அனைவருமே சரணாகதி வழி ைய ப் பின்பற்றுபவர்கள். திருமங்கையாழ்வார் திருவேங்கடம்பற்றிய திருமொழியில் (1.9), “வந்து அடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டருளே’ (2,3, 4,5,6,7,8,9) என்று கூறியிருப்பதையும்; நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் (6.10) அடியேன் உன்பாதம் கூடும் ஆறு கூறாயே (1) என்றும், அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே (9) என்றும், ‘அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (10) என்றும் கூறியிருப்பதை யும் நோக்கினால், சரணாகதி தத்துவம் தெளிவாகும். கிறித்துவப் பெருமக்களும் அடைக்கலத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றனர். 29. குயிற்பத்து (18): வாதவூரர் சிறையில் துன்பப்பட்ட போது, சிறைக்கருகே சோலையிற்புகுந்த குயிலை நோக்கியே இப்பத்தை அருளியதாக நம்பி திருவிளையாடல் குறிப்பிடு கின்றது. (இவ்வளவில் இறைவன் அருளால் கு திரைத்திரள் கள் மதுரை நகர்க்குள்ளே புகுகின்றன). இது அகப்பொருள் துறையில் தூது அனுப்பும் முறையில் அமைந்துள்ளது. இறைவனைக் காதலிக்கும் தலைவியொருத்தி சோலையி னிடத்தே வாழும் குயிலை நோக்கி, எங்கள் பெருமா னாகிய இறைவனை என்பால் வரக்கூவுவாயாக’ என்று குறை 4. தே.பி. : 237 - 246. 5. இதனைத் தில்லையில் அருளிச் செய்ததாகக் 条 மாமுனிவர் குறிப்பிடுவர். தத கடவுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/164&oldid=864067" இலிருந்து மீள்விக்கப்பட்டது