பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலவாய் அருளிச் செயல்கள் 149 மாணிக்கம் வரக் கூவாய்' (3), புண்ணியனை வரக் கூவாய் (4), உலகு அளந்தான் வரக் கூவாய் (5) என்று பலகாலும் கேட்பதைக் காணலாம். "என் தத்துவன் வரச் கூகிற்றியாகில், தலை அல்லால் கைம்மாறு இலேனே' (6) என்று சரணாகதியே அடைகின்றாள். இப்பத்துப் பாடல் களிலும் ஆண்டாள் தன் காதல் நோயை அறிவிக்கின்றாள். 30. அன்னைப் பத்து (17)" : திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளித் தம்மை யாட்கொண்டருளிய இறைவன் மதுரை நகர வீதியில் குதிரைச் சேவகனாக-பரி மேலழகனாக - எழுந்தருளியபோது அவனது பேரழகில் ஈடுபட்டு அவன்பாற் காதல் கொண்ட தலைவியொருத்தி தன் அன்னையை நோக்கிக் கூறும் கூற்றினைக் கொண்டு கூறும்முறையில் திருவாதவூரடிகள் அருளிய பனுவல் அன்னைப் பத்தாகும். இச்செய்தியை, ஆங்கொரு சிறுமி தன்சீர் அன்னையை நோக்கிக் கூறும் தாங்கிசை மொழியே யாகத் தருமவை ஈரைக் தோதி என வரும் கடவுள் மாமுனிவர் திருவாக்கால் தெளியலாம். தலைவியொருத்தி தன் அன்னையை நோக்கிக் கூறும் கூற்றினைக் கொண்டு கூறும் நிலையிலமைந்த பத்துத் திருப் பாடல்கள் அமைந்த பனுவலாதவின் இஃது அன்னைப் பத்து’ என்னும் பெயர் பெறுகின்றது. இதன்கண் பாடல் தோறும் 'அன்னே என்னும் என்ற தொடர் இருமுறை பயின்று வருதல் காணலாம். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையின் இரண்டாம் பத்தாக அமைந்த அன்னாய்ப் 6. இப்பத்து தில்லையில் அருளிச் செய்யப்பெற்ற தாகக் கூறுவர் கடவுள் மாமுனிவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/167&oldid=864073" இலிருந்து மீள்விக்கப்பட்டது