பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மாணிக்கவாசகர் பத்து' என்னும் பெயர்ப் பொருளமைதியினை இவ்வன்னைப் பத்து அடியொற்றி அமைந்திருத்தல் கூர்ந்து நோக்கத்தக்கது. நேயம் மிகுந்த நிலைகுலையக் கூடுதலை, ஆயவருள் தாய்க்கிங் கறைதல் அன்னைப் பத்தாகும்" என்பது திருவாசக உண்மை. இந்தப் பனுவலுக்கு ஆத்தும பூரணம்-அதாவது ஆன்மா சிவனோடு நிறைதல்' என்று பழைய குறிப்பு:பொருள் காண்கின்றது. ஆன்மா சிவத்தோடு ஒன்றி ஒன்றித் தன் தன்மை கெட்டு, எல்லாம் சிவமயமான உன்மத்தமே இன்று எனக்கு ஆயிற்று என்பதை இப்பத்தும் அறிவித்தலின் ஆத்மபூரணம் ஆயிற்றுப் போலும். இப்பனுவலில் அமைந்த பாடல்களில் இரண்டு மூன்றாம் அடிகள் இடைமடக்காய் அமைந்துள்ளன. வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும் புள்ளிக் குப்பாயத்தர் பாய்புரிமேல் கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும்’ (கலிங்கம் - ஆடை முண்டத்தர் - நெற்றியைஉடை யவர்; பள்ளி - அறச்சாலை; குப்பாயம் - சட்டை) 7. பிரிவால் வருந்திய தலைவி உடல் மெலிந்து உள்ளந்திரிந்து, செய்கை ஓய்ந்து, ஆயத்தோடு விளையாடாது, உணவும் வெறுத்து ஒரிடத்துத் தனித் திருத்தலைக் கண்ட தாய்,தோழியை ந்ோக்கி 'இம்மாறுபாடு இவட்கு எற்றினர்ல் ஆயிற்று? என்று வினவ, அதற்கு அவள் அறத்தொடு நிற்கும் நிலையில் தலைவி விாய் சோர்ந்தும் இங்ங்னம் கூறுகின்றாள்' என்று தாய்க்குத் தோழிTஅறிவித் தல் என்று கொள்ளல் மிகவும் பொருத்தமாக அமையும். இலக்கண வரம்புக்கும் மீறாமல் அம்ை கின்றது. ஆயின் கடவுள் மாமுனிவர் வாய் மொழிக்கு முரண்படுகின்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/168&oldid=864074" இலிருந்து மீள்விக்கப்பட்டது