பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நூல்முகம்

  பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும் 
     பெருங்கருணைப் பெற்றிநோக்கிக் 
  கரைந்துகரைந் திருகண்ணிர் மழைவாரத்
     துரியநிலை கடந்து போந்து 
  திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல்
     வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து 
  இருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூர்
     அடிகளடி இணைகள் போற்றி"
                          -சிவஞானமுனிவர்

திருவருட் செல்வர்கள்’ என்ற வரிசையில் நான்காவதாக வரவேண்டிய நூல் நான்காவதாகவே வெளிவருகின்றது. ஞானசம்பந்தர் என்ற நூலை எழுதி முடித்து அச்சிட்டு வெளிவரும் நிலையில் இருந்த உற்சாகத்தில் மணிவாசகப் பெருமானின் அருளிச் செயல்களில் ஆழங்கால் பட்டு அநுபவித்தேன். அதிகாலையில் (3,4 மணிக்கு) துயில் அழுந்து உலகம் முழுவதும் உறங்கிய நிலையில் இருக்கும் போது இவர்தம் திருப்பாடல்களை வாய்விட்டு ஒதினால் நம் ஒலியே நம் காதின்மூலம் சென்று நம் மனத்தை உருக்கும். சிவப்பிரகாச அடிகள் கூறி மகிழும் மாணிக்க வாசகன் என்னும் மேகம் பொழிந்தது: திருவாசகத் தண்ணீர் ஓடிப் படிப்பவர் மனக்குளத்தினை நிரப்பிற்று; நாக்கெனும் மதகின் வழியாக வெளிப்பட்டுக் கேட்பவரின் செவிமடை வழியாக மனவயவில் பரவிற்று: அன்பாகிய வித்திலிருந்து சில்முளையைத் தோற்றுவித்தது; அதிலிருந்து


3. காஞ்சிப்புராணம் - காப்புப் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/18&oldid=1027665" இலிருந்து மீள்விக்கப்பட்டது