பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 மாணிக்கவாசகர்



முல்லையும் குறிஞ்சியும் கதிரவன் வெப்பந் தாங்காது பாலையாகக் காட்சியளிக்கும் என்பதைச் சிலப்பதிகாரத்தில் படித்தது நினைவுக்கு வருகின்றது. ஆனால், நம்மாழ்வார் நானிலமும் திரிந்து கோடையாகும் என்று கூறுவ்ர்.

     நானிலம் வாய்க்கொண்டு நன்னீர்
          அறமென்று கோதுகொண்ட
     வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ்
          பாலை 1

என்பது அவர் திருவாக்கு. நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால் இந்த ஊர்ச் சூழ்நிலை என்னை வியக்க வைக்கவில்லை.கோடையில் எங்கும் இப்படித்தான் இருக்கும். இந்த ஊரைச் செழிக்க வைக்கும் பெரிய ஏரி ஒன்று உண்டு. அதிலும் நீர் இல்லை; வறண்டு கிடக்கின்றது. சில மாதங்களில் நீர்வற்றி வறண்டு போய் விட்டால் விளைச்சலும் நின்று போகும். ஊர் மக்கள் பஞ்சத்தால் உழல வேண்டியது தான். வைகை அணை கட்டிய பிறகு இப்பகுதிகளில் நீருக்குப் பஞ்சம் இல்லை. உழவுத் தொழிலே மக்களின் வாழ்க்கைத் தொழில். இந்த ஊரிலுள்ள ஏரியின் மதகின் மீது உள்ள ஒரு சிலை நம் மனத்தைக் கவர்கின்றது. இச் சிலை மனித முகமும் சிங்க உடலும் கொண்டது. இதன் சிற்ப அழகே கண்ணைக் கவரும் பான்மையது. இது புருஷாமிருகம் என்ற பெயரால் வழங்குகின்றது. இஃது ஏரி நீரைத் தூய்மையாக்கும் தெய்வம் என்றும், ஊரைக் காக்கும் தெய்வம் என்றும்,இதனால் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி யன்று ஒரு திருவிழா நடைபெறுகின்றது என்றும் சிலர் மூலம் கேள்விப்படுகின்றேன். இதன் அருகிலுள்ள பிடாரிக் கோயில் ஊர்ப் பெருமக்களுக்குப் பக்தியின் இருப்பிடமாகத் திகழ் கின்றது. இத்திருக்கோயிலின் நித்திய கருமங்களில் ஏதேனும்1. திருவிருத். 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/20&oldid=1011729" இலிருந்து மீள்விக்கப்பட்டது