பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 191



இதனால் அவருக்குத் திருப்பாவை ஜீயர் என்ற பெயரும் வழங்கிவருகின்றது. இது நிற்க.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது கன்னிப்பெண்கள் இவ்வாறு நோன்புநோற்பதைக் கண்ணாரக்கண்டு அநுபவித்தவர். அப்பெண்கள் புகன்றதாக அடிகள் திருவெம்பாவை பாடியகருளினார் என்று கூறுவர் திருப்பெருந்துறைப் புராணமுடையார்.

  மலவிருள் உற்று உறங்காமல்
     மன்னுபரி பாகர் அருள்
  செலமுழுக வ்ருகவெனச்
     செப்பல் திருவெம்பாவை

என வரும் பாடற்பகுதியில் இத்திருக் குறிப்பைக் காணலாம், எனவே, இந்நோன்பு மணிவாசகர் அல்லது ஆண்டாள் காலத்தில் புதிதாகத் தோன்றிய வழக்கு என்று கொள்வதற் கில்லை. "வெம்பாதாக வியனிலை வரைப்பென, அம்பா ஆடலின் ஆய்தொடிக்கன்னியர்" (பரிபாடல்-11:அடி80-81), என்பதனாலும். தொல்காப்பியச் செய்யுளியலுக்கு உரை வகுத்த பேராசிரியர் (நூற்பா-149) "பாவைப்பாட்டு" என்று குறிப்பிடுவதாலும் பாவை நோன்பும் பாவை இலக்கியமும் தொன்றுதொட்ட சிறப்பினை உடையன என்று கொள்ளுதல் வேண்டும்.

இருபாலாரும் இறைவனது திருவருள் பெற்று உய்யும் நோக்குடன் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய இறைவன் ஒருவனையே மனம் மொழி மெய்களால் இறைஞ்சிப் போற்றும் ஒருமைநிலை வளர இளமகளிர் வைகறையிலே துயிலுணர்ந் தெழுந்து தம் தோழியர்களையும் எழுப்பிக் கொண்டு பொய்கையில் நீராடி இறைவனது பொருள் சேர்புகழை வாயாரப்பாடிப் போற்றும்