பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 மாணிக்கவாசகர்



  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
  நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
                                          (திருப்.14)

என்று அழைத்து அவளை எழுப்புகின்றது. இந்தத் திருப்பாவை அடிகளை,

  மானே நென்னல் நாளைவந்து உங்களை 
  நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 
  போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
                                       - (திருவெம்-6) 

(நென்னல் - நேற்று: புலர்ந்தின்றோ - பொழுதுவிடியவில்லையோ)

என்ற திருவெம்பாவை அடிகளுடன் ஒப்பிட்டு நோக்கலாம். திருவண்ணாமலையிலுள்ள பெண்கள் கூட்டம் ஒன்று "உங்களை நானே வந்து துயிலுணர்த்துவேன்!” என்று சொன்ன ஒருத்தியின் வீட்டிற்கு வந்து எழுப்புவதாக அமைந்த காட்சியை இவ்வடிகள் சித்திரிக்கின்றன.

ஐந்தாவதாக :

இரண்டு பனுவல்களும் நோன்பின் பயனைக் கிட்டத்தட்ட ஒரேவிதமாகவே குறிக்கின்றன. நாடு வளங் குன்றியபொழுது மழை பெய்யவும், நல்ல நாயகர்களை அடைந்து இம்மை நலம் எய்தவும், கன்னியர் கார்த்தியாயணி தேவதையைக் குறித்து மார்கழி முழுவதும் நோற்கின்றனர் என்று இரண்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. இரண்டிலும் கூறப்பெறும் மழைப்பாட்டுகளை நோக்க இது நன்கு வலியுறும். இவ்வுலக நன்மைகளுக்கெல்லாப் மழை இன்றியமையாததால் அம்மழையினை உலகினர் அமிழ்தம் என்று கருதுகின்றனர். இதனை நன்குணர்ந்த ஆயர் சிறுமியர் மழைக் கடவுளைக் குறித்து வரம் வேண்டுகின்றனர். 'மழையே! மழையே! வாவா’ என்று குழந்தையின் பாணியில் மழையின் அதிதேவதையை வரம் வேண்டுகின்றனர். மழைக் கடவுளை நோக்கி, .