பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 மாணிக்கவாசகர்



  ஊனை நாடக மாடு வித்தவா
     உருகி நானுனைப் பருக வைத்தவா 
  ஞான நாடக மாடு வித்தவா
     னைய வையகத் துடைய விச்சையே
                              - திருச்சதகம் - 95

வந்தவர் மன்றுள் ஆடும் பெருமானை வணங்குகின்றார்; கடவுட் பித்து தலைக்கேறுகின்றது; ஆடுகின்றார்; பாடுகின்றார். தில்லைச் சிற்றம்பலவனும் திருப்பெருந்துறையில் காட்டிய ஆசிரியத் திருமேனி காட்டி அருள் புரிகின்றார், இந்தத் திருமேனியைக் கண்டு ஆனந்தக் கண்ணிர் சொரியக் கண்ட பத்து பாடி ஒவியம்போல் அசைவற்று நிற்கின்றார். இங்ஙனம் நீண்ட நேரம் தன் வசமிழந்து நிற்கும் வாதவூரடிகளைக் கண்ட கோயில் மெய்காவலர் இவரைப் பித்தர் எனத் தவறாகக் கருதிப் பொன்னம்பவத்தை விட்டு வெளியேறுமாறு பணிக்கின்றனர். புலனொன்றி நின்ற அடிகளது திருச்செவியில் அச்சொல் புகவில்லை. சிறிது நேரத்தில் அடிகள் தன்னுணர்வு பெற்றுச் சிவசிவ போற்றி எனத் தில்லையம்பலவனை வழிபட்டு வலம் வந்து திருப் புவீச்சரம், திருநாகேச்சரம் (அனந்தீசம்) ஆகிய திருக் கோயில்களை இறைஞ்சி வழிபட்டுத் தில்லை விதியை வலம் வருகின்றார்.

இங்ஙனம் வலம் வரும்போது 'குலாப்பத்து', 'கோயிய் திருப்பதிகம், கோயில் முத்ததிருப்பதிகம்', கீர்த்தித் திருவகவல்’, ‘திருவண்டப் பகுதி', 'போற்றித் திருவகவல் என்பவற்றை அருளிச் செய்கின்றார். மகளிர் நறுமணப் பொடியாகிய சுண்ணம் இடிக்குங்கால் அவர்கள் கூறுவதாக திருப்பொற்கண்ணம் பாடுகின்றார். அருகேயுள்ள சோலையின் சென்று அங்கு விளையாடும் சிறுமியர்களின் பலவகை விளையாடல்களைக் கண்டு களிக்கின்றார்,