பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 223



  இக்கணக் கெவரறிவார்? - புவி
     எத்தனை புளதென்ப தியாரறிவால் 
  நக்க மிலினறிவான்; - மற்று
     நான்றியேன் பிற காரறியார் 3 

என்று கூறியதாகக் கருதலாம்.

41. போற்றித் திருவகவல் (4)

போற்றி என்னும் சொல் பெருவரவிற்றாய் (159) இப்பனுவலில் காணப் படுதலின் இது 'போற்றித் திருவகவல்' என்னும் பெயர் பெறுகின்றது. போற்றி என்ற சொல் வணக்கம் எனப் பொருள்படும். 'நமசிவாய' என்னும் மந்திரத்தின் முன்னுள்ள 'நம' என்னும் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் 'போற்றி' என்பது. போற்றுதல் என்பது புகழ்தல், வணங்குதல், குறிக்கொண்டு பாதுகாத்தல் எனப் பல பொருள் தரும் ஒரு சொல். 'போற்றி என்பது வணக்கம் என்ற பொருளிலும், எம்மைப் பாதுகாத்தருள்க’ என வேண்டிக்கோடற் பொருளிலும் வழங்கும் மந்திரச் சொல் என்பதை இந்த அகவலாலும், போற்றித் திருத்தாண்டகம் (6.5) முதலாக முன்னுள்ள திருமுறைகளில் காணப்பெறும் அருட் பாடலாலும் நன்கு துணியப்படும்.

இந்தப் பனுவலுக்குச் 'சகத்தின் உற்பத்தி’ என்றும், அதாவது "பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் முறைமை" என்றும் பழைய குறிப்பு கூறும். இங்கே 'சகம்’ என்ற சொல் உயிர்களை உணர்த்தும் என்பர் மறை மலையடிகள் (திருவாசக விரிவிரை-2-ஆம் பதிப்பு பக். 249). உயிர்கள் இவ்வுலகில் பிறந்து வீடுபேறடைதற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் இப்பனுவல் அமைந்திருத்தலால் "முத்திபெறும் நெறியறியும் மொழி போற்றித் திருவகவல்’


3. பாரதியார் ; தோ. பா. கோமதியின் மகிமை-5 மா — 15