பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 - மாணிக்கவாசகர்



என இதனை அறிஞர் சிறப்பித்துரைப்பர் (திருவாசக உண்மை). இந்த அகவல் 225 அடிகளையுடைய நிலை மண்டில ஆசிரியப்பா யாப்பில் அமைந்துள்ளது.

ஆன்மாக்கள் அல்லல் பெறும் பிறவிகளாகிற யானை முதல் எறும்பு ஈறாகிய பல பிறவிகளிலும் தப்பி மானிடப் பிறப்பைச் சாரவும் (11-12). அன்னை வயிற்றில் பத்துத் திங்கள் இருந்து தப்பிப் பிழைக்கவும் (13-25). ஆண்டு ஏற ஏற உண்டாகும் அல்லல்களில் தப்பவும் (26-27), காலை மலமொடு கடும்பகல் பசி, இரவு, வேலை, உறக்கம் முதலிய வற்றினின்று தப்பவும் (28-29), காளைப் பருவத்தில் மங்கையர்கண் வீச்சினின்று தப்பவும் (30-5) வாழ்க்கைப் போராட்டத்தில் விளையும் செல்வம் நல்குரவு, கல்வி கல்லாமை முதலியவற்றில் தப்பவும் (36-40), பல்வேறு சமயச் சழக்கர்களிடமிருந்து தப்பவும்(45-55) பெருங்கருணை புரிந்த பெருமானின் உபகாரத்தை உணர்ந்தாலல்லது இறைவனைப் போற்றுதல் நிகழாதாதலின் முதற்கண் எண்பத்தேழு அடிகளால் இந்த அகிலத்தின் தோற்றமும் குருபரனாக வந்து ஆட்கொள்ளும் முறைமையும், பின்னர் எண்பத்து ஏழாம் அடி முதல் இருநூற்று இருபத்து ஐந்து அடிவரைவுள்ள அப்பனுவலின் பிற்பகுதி சிவபெருமானை முன்னிலைப் படுத்திப் போற்றும் மந்திர மொழியாக அமைந்துள்ளது. இப்பகுதி வடமொழி எசுர் வேதத்தின் இடையே அமைந்த திருஉருத்திரத்தைப் போன்று சிவபரம் பொருளை மலர்தூவி வழிபடுதற்கேற்ற செந்தமிழ் மந்திரங்களாக அமைந்துள்ளதென்றும், இவை திருக்கோயில்களிலும் பிற இடங்களிலும் இறைவனை வழிபடு வதற்குரிய சிறப்புரிமை வாய்ந்தனவென்றும் மறைமலை அடிகள் விளக்கியுள்ளனர்.

திருக்குறளில் உள்ள 'அறன் வலியுறுத்தல்' என்னும் அதிகாரத்தைப் போன்று திருவாசகத்தில் நான்காம்