பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 231


 அது வேதம். அகிலம் முழுவதும் வேத சொரூபம். சிவபெருமான் வேதம் ஒதிக்கொண்டிருக்கின்றார் என்பதன் பொருள் இதுவே. அவரவருக்கு உகந்த வேதத்தை இறைவன் ஒதுகின்றார் என்று சமயவாதிகள் இயம்புவது இத்தத்துவத்திற்கு ஒத்துள்ள கற்பனை.”

இப்பனுவலில் கான்காம் பாடல்

   அயனை அனங்கனை
      அந்தகனைச் சந்திரனை 
   வயனங்கள் மாயா
      வடுச்செய்தான் காணேடி 
   நயனங்கள் மூன்றுடைய
      நாயகனே தண்டித்தல் 
   சயமன்றோ வானவர்க்குத்
      தாழ்குழலாய் சாழலோ (4) 

(அயன் - பிரமன், அனங்கன் - மன்மதன்; அந்தகன் - கூற்றுவன்; வயனம் அடையாளம்: நயனம் . கண்)

என்பது. இந்தப் பாடலும் முன்காட்டிது போன்றே வினா விடையாக அமைந்துள்ளது.

வினா: பிரமனையும் காமனையும் யமனயும் சந்திரனையும் சிவன் தாக்கிச் சிதைத்தான். அப்படி ஏற்பட்ட தழும்புகள் என்றைக்கும் மறந்து பட்டுப் போகாத பழிச் சொற்களை அவர்கள்பால் கொண்டு வருவனவாயின. பரமன் இப்படிச் செய்தது நியாயமா?

விடை : நியாயமே. பரமன் முக்கண்ணன். அவனது மூன்றாவது கண் அதீத நிலையைக் குறிக்கும் ஞானக்கண் ஆகின்றது. அகலத்தில் உழலும் தேவர்கள் குறைபாடு உடையவர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுதற்


2. சிதபவாநந்தர் : திருவாசகம் - பக் 564-553