பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ப்பும் 7


 பெற்றோர் தம் உணர்வு நிலையிலிருந்து எழுந்து அறிவு நிலையில் நின்று தம் கடமையை ஆற்றுதல் வேண்டும். இதில் தந்தையின் கடமை பெரிது. தன் மகன் கல்வி கேள்வி பெற்று வளர்வதற்கேற்ற வாய்ப்புகளைத் தந்தை தேடித் தரவேண்டும். இந்த வாய்ப்புகளைப் பெற்று மகன் அறிவுடையவனாய் வளர்ந்து அறிஞர் கூட்டத்தில் முன் நிற்கும் படியாகச் செய்தல் வேண்டும். இதுவே தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நல்ல கடமையாகும்.

   தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
   முந்தி இருப்பச் செயல். 4

என்பது வள்ளுவம். சம்புபாதாசிருதயர் இதை நன்கு உணர்ந்தவராதலால் தன் செல்வனின் க ல் வி யி ல் அதிக அக்கறை செலுத்துகின்றார். கண்ணன் சாந்தீபினி முனிவரிடம் கல்விகற்றபோது சகல கலைகளையும் இரண்டே திங்களில் கற்றதாகக்௪௪௪ கூறுவர். அவர் பரந்தாமனின் அவதாரமாதலால் அஃது அவருக்குச் சாத்தியமாயிற்று.ஆனால் வாதவூரர் 16ஆண்டு நிரம்புவதற்கு முன் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத் தெளிகின்றார்.

   நீர்வாய இளமதியோல்
       நிரம்புவார் வேதமுதல் 
   பார்வாயெண் னெண் கலையும்
       பதினாறாண் டினிற்பயின்றார். 5

(நீர்வாய - குளிர்ந்த ; பார்வாய் - புவியின்கண்; எண்ணெண் கலை - 64 கலைகள்) ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் பதினாறு வயதிற் குள்ளாகவே கற்றுத் தெளிந்தார் என்று கூறுவர் பரஞ்சோதி முனிவர்.


4. குறள்-67. 5. பரஞ்சோதி:திருவிளையாடல். வாதவூரடிகட்கு...5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/25&oldid=1012152" இலிருந்து மீள்விக்கப்பட்டது