பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 279



என்பது தெளிவாகின்றது; சாதியுபாதியை யொழித்தா லொழிய நிர்விகல்ப சமாதி வாய்க்காது என்பதை மணி வாசகப்பெருமான் வெளிப்படையாக வற்புறுத்துவார். சாதிக் கருத்தை,

  சாதிகுலப் பிறப்பென்னும்
     சுழிபட்டுத் தடுமாறும்
  ஆதமிலி காயேனை   (கண்ட-5)
   (ஆதம்இலி-ஆதரவு இல்லாதவன்) 

என்று கூறியிருப்பது ஈண்டு நினைக்கத் தக்கது.

  அங்குஇது கன்று.இது கன்றெனும்
     மாயை அடங்கிடு மாகாதே (அடி-2)

பொருள் : கர்மம் மாயையின் கூறு ஆகின்றது, நல்ல கர்மத்தையே செய்தல் என்னும் நியதி இவ்வுலகுக்குரியது. நல்ல கர்மத்தையும் கடந்து அதீதத்துக்குப் போகும்பொழுது மாயையின் ஆதிக்கம் அடங்கிவிடுகின்றது.

விளக்கம் : இயற்கை என்பதுதான் மாயை. மாயையின் அமைப்பு நல்லதா, கெட்டதா என்ற வினா ஒர் அறிஞரிடம் எழுந்தது. அதற்கு விடையாக அவர் பூனையின் பல் நல்லதா கெட்டதா என்று கேட்டார். இந்த வினாவை ஓர் எலியிடம் விடுத்தால், பூனையின் பல்லைவிடக் கொடியது உலகில் ஒன்றுமே இல்லையென்று இயம்பும். மற்றும் இதே வினாவை பூனைக் குட்டியிடம் விடுத்தால் தன் தாய்ப்பூனையின் பல்லைவிட நல்லது உலகில் வேறு ஒன்றும் இல்லையென்று சொல்லும். பூனையின் பல் தன் அளவில் நல்லதும் அன்று; தீயதும் அன்று. அதனோடு தொடர்பு கொள்பவர் பாங்குக்கு ஏற்ப அது நல்லதாகவோ கொடியதாகவோகாட்சி கொடுக் கின்றது.

மாயை அல்லது இயற்கையின் தன்மையும் அத்தகையதே நல்லார்க்கு மாயை அருள் நிறைந்தது. பொல்லார்க்கு