பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304 மாணிக்கவாசகர்



இந்நூலில் உரையாடும் இயல்பினராகிய தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி முதலிய அனைவரும் இந்நூலின் பாட்டுடைத் தலைவனாகத் திகழும் தில்லையம்பலவனின் திருவடிகளில் அழுந்திய பேரன்பினர்கள்; அம்முதல்வனின் தொண்டர்களாய் ஒழுகும் சிவபக்திச் செல்வர்கள். இவ்வுண்மை அவர்கள் தத்தம் உரையாடல்களில் தில்லையம்பலப் பெருமானுக்கும் தனக்கும் உள்ள ஆண்டான்-அடிமைத் தொடர்பினை ஆங்காங்குக் குறித்துச் செல்வதால் நன்கு தெளியலாம். தலைவன்,

   அணியும் அமிழ்தும்என் னாவியும் 
      ஆயவன் தில்லைச்சிந்தா 
   மணியும் பராரறி யாமறை
      யோன்அடி வாழ்த்தலரில் (5) 

(ஆ.வி - உயிர்; உம்பர் தேவர்; மறையோன் - அந்தணன்)

இப்பாடற் பகுதியில் தனக்குச் சிவபெருமான் அணியும். அமிழ்தும் ஆவியுமாக இருக்கின்றமையைப் புலப்படுத்தி யிருத்தல் காணலாம். பாங்கனும்,

   சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும்
      என்சிந்தை யுள்ளும் உறைவான் (20) 

என்று தன் சிந்தையுள் சிவன் தங்கியிருத்தலைப் புலப்படுத்து கின்றான். "பிரிவு கூறல்” என்னும் துறையில் தோழியும் தலைவன் பகை தணிவினைக்குப் பிரிவினை யுணர்த்தும் போது,

                          ...பல்பிறவித் 
  தொகைத ணித்தற் கென்னை ஆண்டுகொண்  
     டோன்தில்லைச் சூழ்பொழில் (313)