அருளிச் செயல்கள் 309
தலை மகளிடத்தில் துணிந்து கூறமுடியாதவளாக உள்ளேன்; நீயே அவள்பால் சென்று நின்குறையைச் சொல்வாயாக' எனத் தான் உடன்படாது மறுத்துக் கூறுவதாக உள்ளது இப்பாடல்.
"அந்திப் பொழுதின்கண் உண்டாகிய செவ்வானத்தின் எழிலையுடைய அம்பலத்தின்கண் உள்ளவனும், எல்லாப் பொருட்கும் அப்பாலானவனும் ஆகிய எம்முடைய இறைவனது அழகிய பொன்னையுடைய மலையிடத்தே பந்தியாகிய நிறையின் கண்ணே ஆண் குரங்கு இனிய பலாச்சுளையைச் செவ்விய தேனோடும் (தன்துணையாகிய) பெண்குரங்கின் வாயிலே அருந்தக் கொடுத்துப் பாதுகாக்கும் மலைப் பக்கத்தையுடைய தலைவனே, அவளது மனம் நெகிழுமாறு இவ்வினிய மொழிகளை அம்மொய் குழலையுடையாளாகிய தலைமகட்கு நீயே சென்று கூறுவாயாக" என்பது இப் பாடலின் பொருள். பந்தியின் வாய்ப் பலவின் சுளை பைந் தேனொடும் கடுவன். மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும்' என்றது உள்ளுறை உவமமாக வந்த கருப் பொருள் நிகழ்ச்சி. 'மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல அவள் (தலை மகள்) உயிர்வாழ்வதற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மன மகிழ்விப்பாயாக’’ என்பது இதற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும்." செய்யுளில் வெளிப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கிய குறிப்புப் பொருளை இறைச்சி என வழங்குதல் மரபு. 'இறைச்சிப் பொருள் என்பது, உரிப்
6. திருக் கோவையாரில் 128, 133, 159, 158, 193, 250, 252, 254, 260, 262, 264, 265, 276, 369, 317, 380 ஆகிய எண்ணுள்ள பாடல்களில் உள்ளுறை உவமை வந்துள்ளது. பேராசிரியர் உரை நோககித் தெளிக.