பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 311



இதன்கண் வேங்கை மலரால் மூடப்பெற்றுள்ள கற்பாறையைக் கண்ட யானை அதனைப் புவி என எண்ணி அஞ்சும் நாடன் எனத்தலைவனுக்கு அமைந்த அடைமொழி இறைச்சிப் பொருள்பட வந்தது. ஒன்றைப் பிறி தொன்றாகப் பிறழவுணரும் நாடன் ஆதலால், தெய்வத்திற்குரிய நறுமலரைச் சூடாத குறமகளிராகிய எம்மை அம்மலரைச் சூடுவேமாகப் பிறழ உணர்ந்தாய்’ என்பது இதன்கண் அமைந்த இறைச்சிப் பொருள். ஒத்ததோற்றம் உடைமை ஒன்றேயற்றி, அஞ்சப்படாததனையும் அஞ்சுதற்கு இடனாயது எமது மலைநிலம் ஆதலால், எம்குலத்திற்கு ஏலாததாய் நீதரும் தெய்வமலரைச் சூடுதற்கு யாம்அஞ்சுதல் சொல்லவேண்டுமோ? எனக் கூறித் தோழிமறுத்ததாக இறைச்சிப்பொருள் கொள்ளினும் பொருந்தும் என்பர் பேராசிரியர்.

இந்த உள்ளுறை, இறைச்சி என்பவற்றைப் போலன்றி. அகத்தினையொழுகலாற்றோடு தொடர்பில்லாததாய் இரட்டுறமொழிதலால் பிறிதொருபொருள் விளங்கித் தோன்றும் பாடல்களும் இத்தெய்வப் பனுவலில் உள்ளன. இங்ஙனம் அகப்பொருள் ஒழுகலாற்றிற்கு அயன்மையுடையதாய்த் தோன்றும் இப்பொருளைப் பேராசிரியர் நுண்ணிதின் உணர்ந்து இவற்றை வேறு ஒருபொருள் என எடுத்துக் காட்டியுள்ளார்.

  நேயத்ததாய் நென்னல்என் னைப்புணர்ந்து
     நெஞ்சம் நெகப்போய் 
  ஆயத்ததாய் யமிழ்தாய் அணங்காய்
     அரனம் பலம்போல் 
  தேயத்ததாய் என்றன் சிந்தையதாய்த்
     தெரியிற் பெரிதும் 
  மாயத்த தாகி இதோவந்து
     நின்றதென் மன்னுயிரே
                            -திருக் 39