பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320 மாணிக்கவாசகர்



  தூக்கி முன்செய்த பொய்யறத்
     'துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி
  ஆக்கி யாண்டுதன் அடியரிற்
     கூட்டிய அதிசயம் கண்டாமே {433)

(நிலாவகை - நில்லாத வகை; துண்ணிய நொடியன சொல் - மிக நுண்ணியனவும் கைநொடியில் அமைந்தனவுமாகிய சொல் (சின் முத்திரையால் உணர்த்திய உபதேசத்தை); நுகம் இன்றி விளாக்கைத்து நுகத்தடி இல்லாமல் உழுது. உழுததை விளாவடித்தல் என்றது உழவர் வழக்கு. பொய் - பயனில செய்கைகள். துகள் -குற்றம்.)

என்ற திருப்பாடல் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். அதிசயப்பத்தில் உள்ள இப்பாடலில், 'நுகத்தடி யாகிய பாரம் வைக்காமல் நிலத்தை உழச்செய்வது போல் எவ்வித முயற்சியையும் யான் மேற்கொள்ளாமலேயே ஞான நிலையை அடையச் செய்து யான் முன்செய்த பொய்கள் அறுமாறு என்னை எடுத்து யான் பிறந்தபின் உண்டான என் பாசத் துகள்களையெல்லாம் அறுத்துப் பின்பு உதய மலையில் எழுகின்ற சூரியனைப் போன்ற சோதி வடிவினனாக என்னை ஆக்கி ஆட்கொண்டு தன் அடியாரோடு கூடிய அதிசய நிகழ்ச்சியைக் கண்ணாலே கண்டு அநுபவித்தோமே" என்று அடிகள் வியத்தலைக் காணலாம்.

  மானேர் நோக்கி மணவாளா
     மன்னே நின்சீர் மறப்பித்துஇவ் 
  வூனே புகவென் றனைநூக்கி
     உழலப் பண்ணு வித்திட்டாய் (497) 
   (ஊன் - உடல்: நூக்கி - செலுத்தி)

என்ற குழைத்தபத்தின் திருப்பாடலிலும் இறைவன் தன் புகழை மறக்கச்செய்து தம் இவ்வூனுடலில் புகுமாறு தள்ளிய