உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 351 பலரைப் புணர்ந்தும்இருட் பாலைக்குண் டென்றும் கணவர்க்கும் தோன்றாத கற்பு (டிெ-டிெ-5) என்றும் இதன் கொடுமையை விளக்குவர் உமாபதிசிவம். மணிவாசகப் பெருமான் ஆணவத்தை 'இருள்” எனவே கூறுவர். வல்வினையேன் தன்னை மறைந்திய மூடிய மாய இருளை -சிவபுரா, 50.51 எனவும். என்னுடை இருளை ஏறத் துரந்தும் கீர்த்தித் - 6 எனவும், ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்று.அவன் வாங்கியஎன் பாசத்திற் கார் என்று அவன் (திருக்-109) எனவும் கூறுவது காண்க. மற்றும், ஆணவமலம் அறியாமை யைச் செய்தலின் அஃது அஞ்ஞானம் எனவும் பேசப் பெறும், இது, அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் வல்லறிவே -சிவபு 40 என்ற அடியால் அறியப்படும். உயிர்களின் அறிவுசெயல் முதலியன வெளிப்பட வொட்டாது அவற்றைக் கயிறுபோல் இறுகப் பிணித்து நிற்றலின் அது பாசம் எனப்படுகின்றது. இதனை, பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே -சிவபு.64 எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/369&oldid=864495" இலிருந்து மீள்விக்கப்பட்டது