பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைச்சர் வாழ்வு 19



அமைச்சரும் அரசன் சொல்லுக்கு எதிர்ச்சொல் ஒன்றும் கூறாமல் நிதியறையில் வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்கின்றார். கணக்கிலும் பதிவு செய்கின்றார். பொருள்களைப் பெட்டகத்தில் கட்டி நம்பிக்கைக்குரிய ஏவலாளர் களிடம் ஒப்புவித்துப் பயணப்படுத்துகின்றார். தானும் திரு ஆலவாய் திருக்கோயிலை அடைந்து அங்கயற்கண்ணியொடு அமர்ந்துள்ள ஆலவாய் இறைவனைப் பணிந்து,"பெருமானே, குதிரை வாங்கச் செல்லும் என் பயணம் இடையூறின்றி இனிது நிறைவேற அருள் புரிவாயாக’ என வேண்டி விடை பெற்றுச் செல்கின்றார்.

அரச மரியாதையுடன் பயணம் தொடங்குகின்றது. சிறப்புடன் அணி செய்யப் பெற்ற முத்துச் சிவிகை, குடை, கொடி, ஆலவட்டம் முதலிய விருதுகள், மெய்காப்பாளர்என்ற முறையில் அரச மரியாதை நடைபெறுகின்றது : அரசனே நேரில் வந்து அமைச்சரை வழியனுப்பி வைக் கின்றான். இதனைப் பரஞ்சோதி முனிவர்,

   இன்னிய மதிர்ந்தன எழுந்தன பதாதி 
   துன்னிய வினைக்கவரி துள்ளின. துகிர்க்காற் 
   பொன்னியன் மதிக்குடை கிழன்றன. பொலங்கொள் 
   மன்னிய மணிச்சிவிகை மேற்கொடு நடந்தார் 11

|பதாதி - கொடி இணைக்கவரி - இரட்டைச் சாமரை க்ள்; துகிர்க்கால் - பவளக்கால்; மதிக்குடை - சந்திர வட்டக் குடைகள்)

என்று காட்டுவர். இதுதான் இவர் வாழ்வில் நடைபெறும் இறுதி மரியாதை, அரசு வாழ்வு முடிவதற்கும் செய்யப் பெறும் மரியாதை பிரமராயரின் அமைச்சர் வாழ்வும் போகம் நுகர்ந்த இலௌகிக வாழ்வும் முடியப் போகின்றன. இந்தப் பயணமும் வாதவூரர் வாழ்வைத் திசை திருப்புவதாக அமைகின்றது. பயணமும் வாதவூரருக்குப் புதிய வாழ்வு தரப்போகும் புண்ணியப் பயணமாக அமைவதாகின்றது.


11. வாதஆரடிகளுக்கு-26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/37&oldid=1012196" இலிருந்து மீள்விக்கப்பட்டது