பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை நிகழ்ச்சிகள் 31




  நனவே யெனப்பிடித்
     தாட்கொண்டவா நயந்துநெஞ்சம் 
  சினவேற்கண் நீர்மல்கத்
     தெள்ளேனம் கொட்டாமோ 18
                           --திருத்தெள்ளே 10

எனவும் வரும் அடிகளின் பாடற்பகுதியாலும் தெளியலாம்.” 19


பாண்டியனிடம் விடைபெற்று வரும் அடிகளின் வரலாற்றைத் திருவாதவூரர் புராணம் சற்று வேறுவிதமாகக் கூறுகின்றது. நம்பனுக்கு அருள் பூண்ட வாதவூரர் நற்றவக் கோலங் கொண்டு தம்மை ஆட்கொண்ட குருநாதரைக் கண்டிறைஞ்ச விரும்பித் திருப்பெருந்துறையை அடை கின்றார்; குருநாதர் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சுகின்றார். அடியார்கள் சூழ எழுந்தருளியிருந்த குருநாதர் அடிகளுக்குத் திருநீறு தரித்து அருட்பார்வை நல்குகின்றார். தம்மைச் குழ்ந்துள்ள அடியார்களை நோக்கி, "நாம் கருதிவந்த காரியங்கள் யாவும் முடிந்தன. கயிலையிலுள்ள நம் தொண்டர்கள் நம்மைக் காண விரும்பி தியானிக்கின்றனர். ஆகையால் நாம் அங்குச் செல்லுதல் வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியுடன் இங்கு வாழ்ந்திருப்பீராக’ எனக் கூறுகின்றார். தொண்டர்கள் யாவரும் குருநாதர் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சித் தோத்திரம் செய்து, எம்பெருமானே, நினது பிரிவைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையோம் அல்லோம். எம்மைக் கைவிடுவாயோ?” என்று அழுதரற்றுகின்றனர். அவர்கள் மீது அருளுடைய இறைவனும், "நீங்கள் வருந்த


18 திருவர். திருத்தெள். 10

19. மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பிறிதோரிடத் தில் (கட்டுரை - 7) காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/49&oldid=1012326" இலிருந்து மீள்விக்கப்பட்டது