பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 மாணிக்கவாசகர்



என்பது இரண்டாவது பாடல், இதில் "கதிரவனைத் தன்னுடைய குன்றுதலும் பொன்றுதலும் என்றுமில்லா இயற்கையறிவுப் பேரொளியான் மறைந்து விளங்கும் பெருஞ்சுடராக வுள்ளவன் சிவபெருமான்; அவன் முத்தலை வேலாகிய கழுக்கடையினைக் கையின்கண் பிடித்து அழகிய வெண்ணிறக் குதிரையின்மேல் எழுந்தருளிப் பேரருளால் வந்து கூடுவன்; அங்ங்னம் கூடுமேல் கண்ட மெய்யன்பர்கட்கு இவ்வுலகப் பிணிப்பு வாழ்வு அகன்றொழியும்; மதுரைமாநகர் வாழ்வாரைத் தன்னுயிரினும் சிறப்பாகக் கருதிக்காவல் பூண்டு ஆட்சிபுரிந்து வரும் மதுரை மன்னனுயைட மறுபிறப்பு அடியோடு நீங்குமாறு போக்கியருள்வன்; திருவருளால் இத் திருக்கோலத்தைச் சார்ந்து காணும் பேறுபெற்ற மெய்யன்பர்கள் தங்களின் திறலை அறவே மறந்து அறிவழியாத பேரன்பு என்று சொல்லப்படும் அறிமால்கொண்டு இன்புறுவர். இவ்வுண்மையினை வாய்ப்பறையாக நாக்கடிப்பாகப் பிறரும் கேட்டு இன்புற்று உய்யுமாறு எங்கணும் விளம்பிக் கூறினோம்" என்கின்றார்.

  ஈண்டிய மாயா இருள்கெட
      எப்பொரு ளும்விளங்கத் 
  தூண்டிய சோதியை மீனவ
     னுஞ்சொல்ல வல்லனல்லன் 
  வேண்டிய போதே விலக்கிலை
     வாய்தல் விரும்பு மின்றாள் 
  பாண்டிய னாரருள் செய்கின்ற
     முத்திப் பரிசிதுவே. (6) 

(சண்டிய நெருங்கிய; எப்பொருளும் - உயிர் மனம் இறையொளி ஆகிய எல்லாப் பொருகள்; மீனவன் - பாண்டியன்; ஐவாய்தல் - ஐந்து வாயில்களாகிய பொறிகள்)

என்பது ஆறாம் பாடல், இதில் "ஆருயிர்கட்க்கு இருள் சார்பாம் மருளினால் திரிபுணர்ச்சி என்று சொல்லப்படும் இருள் உண்டாகும் அது நீங்கவும், நிலைத்த பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/78&oldid=1013181" இலிருந்து மீள்விக்கப்பட்டது