பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 63



பொருட்டுக் குருநாதனாக எழுந்தருளி ஆதிபிரம்மம் (மெய் பொருள்) வெளிப்படுத்தியது (1), இடவை (திருவிடைமருதூர்) யிலுள்ள கற்புடைய மாது ஒருத்தியை வரகுண பாண்டியன் மணந்தான்; நல்லதையெல்லாம் சிவனுக்கு அளிக்கும் அவ்வரசன் இப்பெண்மணியையும் பரமனுக்கு அளித்தான். சிவபெருமான் அவளைத் தன் சொரூபத்தில் இலயமாகும்படி செய்தார் (2); வலைஞர் மகளாகத் திருவ வதரித்த உமாதேவியாரை நேசித்து அவரைத் திருமணம் புரிந்து அவர்க்குத் தன் இடப்பால் உடம்பினைக் கொடுத் தருளி உலகினை வாழ்வித்தருளினன் (3) மகேந்திர மலைக் கண் வேட்டுவன் உருவாகி ஆகமம் அருளிய பெருமான ஆடலமர்ந்த பரிமாஏறி எல்லா இடத்திலுமுள்ள தொண்டர் களை ஆட்கொண்டருளினன் (4): கடலினைக் கடந்து இலங்கை நகர்சென்று இராவணன் மனைவியாகிய மண்டோதரிக்குப் பேரருள் புரிந்தனன்(5); அம்பு பட்டு ஆவி நீத்த ஒரு பெண் பன்றிக்கு இரங்கிப் பன்றி வடிவுகொண்டு பன்றிக்குட்டிகட்குப் பால் கொடுத்தருளினன்(6); தங்கள் கணவன்மார்களை இழந்த கலைமகளும் திருமகளும் சிவபெருமானே வழுத்தியதனால் அன்னவர்களை அவர்கள் மீண்டும் உயிர் பெற்றுச் சுமங்கலிகளாயினர் (7): வருணனது வேள்வித்தீயில் தோன்றிய மங்கையரை மணந்து தன்மயமாக்கிய பெருமையுடையவன்(8); அடிகள் மீது கருணை காட்டி அவர் சென்னிமிசை திருவடிகளை வைத்து ஆட்கொண்டவன்(9); மதுரை மாநகரின்கண் நற்றவப் பயன்சேர் நங்கைமார்தம் கையிலுள்ள வளையல்களை எடுத்துக் கொண்டு அவர்கட்குத் திருவடிப்பேறு நல்கவும் வாணிகச் சாத்துடன் தோன்றியருளிய வாய்மைத் திறலோன் (10); இறைவனின் இந்தப் பொருள்சேர் புகழ்ச் செய்திகளைப் போற்றும் அடியார்கள் தமக்கு இறைவன் என்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/81&oldid=1013219" இலிருந்து மீள்விக்கப்பட்டது