பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 65




  தொந்தமா மலமறுக்கும் சுகம் பெருக்கிப்
     பெருந்துறைவாழ் சோதி என்றன் 
  சிந்தையே ஊராகக் கொண்டிருந்தான் 
     என்றுரைத்தல் திருவெண்பாவாம் 

என்று கூறும் திருப்பெருந்துறைப் புராணம். இது பதினொரு வெண்பாக்களையுடையது.

  பொய்யும் வினையிரண்டும், வெந்தகல மெய்யுருகிப் 
  பொய்யும் பொடியாகா தென்செய்வேன்-செய்ய 
  திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ 
  மருவா திருந்தேன் மனத்து (1)
 (பொய்-பொய்யான வாழ்வு)

என்பது இதன் முதற் பாடல், இதில் "மகிமையோடு கூடிய ஞானத் தீயாக மிளிர்பவன் சிவன். அவன் சொரூபத்தில் என்னைச் சேர்த்துவிட்டால் நல்வினையும் தீவினையும் தூசாகிப் பொசுங்கிப் போகும். பஞ்ச பூதங்களால் ஆகிய பொய்யுடலும் வெந்து போகும். திருநீறு போன்ற சிவ சொரூபமே எஞ்சி நிற்கும். அதுவே சிவானந்தம் என்னும் தேன் ஆகும்."

மாணிக்கவாசப் பெருமான் பெற்ற சிவானந்தத் தேனாகிய பேரானந்தத்தினை இப்பனுவலின் பாடல்கள் தெளிவாக விளக்குகின்றன. 'என் உள்ளத்தில் ஒளிர்கின்ற சிவ உணர்வு யாண்டும் உள்ளபடி அசலமானது. அஃது இரண்டற்ற தனிப் பொருள். அது பேரானந்த சொரூபம், அநுபூதியில் அதை அறிந்து கொண்டதனால் இனி எனக்குப் பிறப்பும் இல்லை: இறப்பும் இல்லை. நான் பெற்றுள்ள பேறு முத்தியாகும்'(7) 'சிவன் அகண்ட பொருள். பரிபூரணன். அற்பனாகிய என்னை அவன் உலகு அறியத் தன்மயமாக்கினான். இதற்கு

 மா-5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/83&oldid=1013241" இலிருந்து மீள்விக்கப்பட்டது