பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 மாணிக்கவாசகர்


 எப்படி நன்றி செலுத்துவது என்று எனக்கு விளங்கவிலலை' (8), "கட்புலனாகாத பொருள் தன்னைக் கட்புலனாக்குபடி கீழ்நிலைக்கு இறங்கி வந்தது அடியவர்களின் மீது அவன் வைத்துள்ள இரக்கத்தினாலேயாகும்” (9). இக்கருத்தைத் தெளிவாக்குதல் இன்றியமையாதது. கட்புலனாகாத நீராவி கட்புலனாகும் மேகமாக மாறுகின்றது. பிறகு அது மழையாக இறங்கி உயிர்கட்கு உணவாகின்றது. அங்ங்ணம் நிர்க்குண நிராகாரப் பரம்பொருள் சகுணசாகர மூர்த்தியாகின்றது. அந்த மூர்த்தி பக்குவமான ஆன்மாக்களை உய்விக்கின்றது. சிவபெருமான் குருந்த மரத்தடியில் குருநாதனாக எழுந் தருளியது, குதிரைச் சேவகனாகப் போந்தது, பிட்டுக்கு மண் சுமந்தது இக்கோட்பாட்டுக்குச் - சான்றுகளாகின்றன.' இறுதிப் பாடலில் 'தொண்டன் உள்ளம் சிவபெருமானின் பெருங்கோயில் ஆகின்றது' (11) என்ற கருத்து தெரிவிக்கப் பெறுகின்றது.

=

16. பண்டாய கான்மறை (48) ===== பண்டாய நான்மறை: என்பது முதற்குறிப்பாற் பெற்ற பெயர். பண்டாய நான் மறை என்பது, இன்னநாள் என்று ஒருவராலும் அளந்தறிய முடியாத தொன்மைக் காலத்தே இறைவனது வாய்மொழி யாகத் தோன்றிய நான்மறைகளை. அத்தகைய வேதங்களும் தனது இயல்பினை நுணுகி அரிய முடியாமல் ஐயா' என ஓலமிட்டு அலற அவற்றுக்கு அகப்படாது மேலோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன் இறைவன் என்பார் "பண்டாய நான் மறையும் பாலணுகா" (1) என்கின்றார். உலகம் காக்கும் மூவருள் திருமாலும் அயனும் இறைவனாகிய


17. வைணவசித்தாந்தப்படி அவன் (பரவாசுதேவன்). இராமன் திருட்டிணன் போன்ற அவதார மூர்த்தி களாய் உலகில் வந்து தர்மத்தையும் பரதத்துவத்தை யும் மக்களுக்கு விளக்கியருள்கின்றான். அவன் கருணாகரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/84&oldid=1013242" இலிருந்து மீள்விக்கப்பட்டது