பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 மாணிக்கவாசகர்



வனிடம் சென்று அவன் திருவடிக் கமலங்களில் ஊதுமாறு வேண்டிக் கொள்வதாகப் பாடப்பெற்றது இப்பனுவல் என்பர்.

இருபது பாடல் கொண்ட இருப்பனுவலுக்கு "சிவனோ டைக்கியம்" என்பது பழைய குறிப்பு. சிவனோடு இடையறாது நிற்றல் என உரை காண்பார் அருணகிரி முதலியார். மனமாகிய அரசவண்டைப் பார்த்துச் சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஊது என வேண்டிக் கொள்வதால் சிவனோடு ஐக்கியமாகின்றது. சிவபோகத்திற்குப் பிரிவு உண்டாக அதற்கு மனத்தையே தூதாக அனுப்புதல் கோத்தும்பி என்கின்றது திருப்பெருந்துறைப் புராணம். "உயர்போத மொரு வண்டாக்ச் சித்தவிகாசத் தூது செப்பி விடல் கோத்தும்பி எனவரும் திருவாசக உண்மையாலும் இது தெளிவாகும், 'சடசித் தெங்கனும் தாமே நிறைந்த சிவானுபவ சுவானுபூதிகம் விழைந்த அடியார்கள், அவ்விளக்கம் எனக்கும் கிடைத்தது, உனக்கும் கிடைத்தது' என்று ஒருவர்க்கொருவர் மடிபிடித்துக் கொண்டு வண்டு சுழலுகிறது போலச்சுழலும் விளையாட்டு என இத்திருக் கோத்தும்பிக்கு விளக்கம் கூறுவர் சீகாழித்தாண்டவராயர். இப்பனுவலில் இரண்டு பாடல்களில் ஆழங்கால் படுவோம்.

  நோயுற்று மூத்துநான்
     நுந்துகன்றா யிங்கிருந்து 
  நாயுற்ற செல்வம்
     நயந்தறியா வண்ணமெல்லாம் 
  தாயுற்று வந்தென்னை
     யாண்டுகொண்ட தன்கருனைத் 
  தேயுற்ற செல்வற்கே
     சென்று தாய் கோத்தும்பி (10)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/96&oldid=1014161" இலிருந்து மீள்விக்கப்பட்டது